உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ - 25❖ மறைமலையம் - 25

லன்றித் தாமாகவே ஒரு சிறிதும் புலப்படாமையினாலும், அவ்வாறு இயங்குமிடத்தும் அவனேவல்வழிநின்றே இயங்கு தலினாலும் ‘எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்து' என்றார்.

இனி அங்ஙனம் எல்லா வுயிர்களின் தன்மைகளையும் தன்னகப்படுத்துத் தான் அவற்றோடு ஒன்றாய் நிற்பினும் இறைவனியல்பு உயிரியல்புகளின் வேறாய் முதன்மையுற்று நிற்குமென்று உணர்த்துவார் 'தானே ஆகிய இறை’ என்றருளிச் செய்தார். இறைவன் உலகுயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் தன்மையால் வேறாயும் நிற்பன் என்பதுபற்றியே ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனாரும்.

“கட்டும் உறுப்புங் கரணமுங் கொண்டுள்ளம் இட்டதொரு பேரழைக்க என்என்றாங் - கொட்டி அவன்உளம் ஆகில்லான் உளம்அவனா மாட்டா தவன்உளம்ஆய் அல்லனுமாம் அங்கு"

என்று அருளிச் செய்தார்*. (சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்) ‘அமர்தல்’ மிகுதிப்பொருளை யுணர்த்தலும் ‘துதைதல்’ நெருங்குதற்பொருளை யுணர்த்தலும் திவாகரத்துட் காண்க.

100 மந்திர மாமலை மகேந்திர வெற்பன்

அந்தம்இல் பெருமை அருளுடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசது பகரின்

மந்திர மாமலை - மறைமொழிகள் வெளிப்படுதற்கு மான சிறந்த மலையாகிய, மகேந்திர வெற்பன் - மகேந்திரம் எனப் பெயர்வாய்ந்த மலையை இருப்பிடமாய்க் கொண்டவன், அந்தம் இல் பெருமை அருள்உடை அண்ணல் - முடிவு இல்லாத பெருமையினையும் அருளினையும் உடைய பெருமான், எம்தமை ஆண்ட பரிசது பகரின் எம்மை அடிமைகொண்ட தன்மையைச் சொல்லுமிடத்து என்றவாறு.

6

இறைவன் மறைமொழிகளைப் புலப்படுத்திய இடம் மகேந்திரமலை என்பது மேலே "மன்னுமாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்” என்று அடிகள் கூறியவாற்றால் அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/165&oldid=1589387" இலிருந்து மீள்விக்கப்பட்டது