உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

133

மந்திரமாவது : “நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரமென்ப” என்று* (தொல்காப்பியம் செய்யுளியல் 179) ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய வாற்றான் நிறைந்த மொழியினை யுடைய தோலா நாவின் மேலோர் ஆணையிற் கிளந்த மறை மொழிகளே யாம் என்பது பெற்றாம். பெறவே, அம்மேலோருள்ளத்திலும் சொல்லிலும் முனைத்து விளங்கும் இறைவன் அவர் வாயிலாய் அம் மந்திரங்களைத் தோற்றுவித்தருளினானென்று கோடலும் பொருத்தமேயாகலின், அவர்செய்த அவற்றை இறைவன் மேலவாக வைத்தும் வழங்குவர்.

105

அண்ணல் - பெருமையிற் சிறந்தோன்.

ஆற்ற லதுவுடை அழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும் ஆனந் தம்மே ஆறா அருளியும்

மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்

-

-

ஆற்றல் அது உடை அழகு அமர் திருவுரு வலிமையுடைய அழகுமிக்க திருவுருவத்தின்மேல் நீற்றுக்கோடி - திருநீற்று வரிகளை, நிமிர்ந்து காட்டியும் - இடையிட்டுக் காட்டியும், ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் ஆனந்தமே ஆறு ஆ அருளியும் கேட்டினை ஒன்றுசேர்த்து ஒன்றாய் அழிக்கும் பேரின்பத்தை ஆறாகத் தந்தருளியும், மாதின் கூறுஉடை மாபெருங் கருணையன் - உமையம்மையை ஒரு பங்கில் உடைய மிகப்பெரிய அருளினையுடையான்,நாதப் பெஐம் மறை நவின்று கறங்கவும் - நாததத்துவமாகிய பெரியபறை பல்காலும் பயின்று ஒலிப்பவும் என்றவாறு.

இறைவன் முடிவிலாற்றல் உடையனாகலின் ‘ஆற்றலது வுடை' என்றார். ‘ஆற்றலது' என்பதில் அது பெயர்ப் பொருளை அசைத்து நின்றமையின் ஓர் அசை நிலையாம்.

'நீற்றுக்கோடி' என்பதில் கோடி என்பது வளைவுப் பொருளை யுணர்த்துங் கோடு என்னுஞ் சொல் இகர வீந்றொடு புணர்ந்தமையால் வளைந்தவரி எனப் பொருள்படுவதாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/166&oldid=1589389" இலிருந்து மீள்விக்கப்பட்டது