உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

❖ 25* மறைமலையம் – 25

எனவே, நீற்றுக்கொடி என்பது நெற்றியினும் பிறவிடங்களினும் முன் மூன்றுவரையாக இடப்படுந் திருநீற்றின் வடிவைக் குறிக்கின்றது. இங்ஙனம் பொருளுரைக்க வறியாதார் கொடி எனுஞ்சொற் கோடிஎன நீண்டதெனவும் பிறவாறும் உரைப்ப.

6

றூயவாய்

அவனையே

பற்றுக்

இறைவன் அழல்வடிவின னென்பது மேலே விளக்கப் பட்டமையால் அழலினைச் சாரும் ஏனைப் பருப்பொருள்கள் அத்துணையும் அதனான் எரித்துத் தூயவாக்கப்பட்டு வெள்ளிய நீறாய் அதனைச் சார்ந்துநிற்றல்போல, சுத்தமாயை முதலான ஏனைப் பொருள்களெல்லாம் இறைவன்றன் ஞான வனலின் சேர்க்கையாற் கோடாய்க்கொண்டு நிற்குமென்பதற்கு அடையாளமாக இறைவன் றிருமேனிமேல் திருநீற்றுக் கோடுகள் காணப்படுவ வாயின வென்பது. இதுவே இக்குறியின் கருத்தாதல் “துடி காள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவட, பொடிகொள்வான் தழலிற் புள்ளி போல் இரண்டு பொங்கொளி தங்குமார் பின்னே” என்று* (அருட் பத்து 5) பிறாண்டும் அடிகள் அதனை உவமைமேல் வைத்துக் கூறியவாற்றானும் நன்கு விளங்கும்.

'நிமிர்ந்து' இடையிட்டு எனப் பொருள்படுதலை “நிறைந்து முறழ்ந்தும் நிமிர்ந்துந் தொடர்ந்தும்" என் புழிப்* (பரிபாடல்) பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க. திருநீற்று வரைகளை இடையிட்டுக் காட்டுதலாவது திருமேனி முழுதும் பூசாமல் நெற்றி உரம் வயிறு முழந்தாள் கை முதுகு பிடர் என்னும் உறுப்புக்களில் இடை விட்டு அணிதல்.

டு

ர்

ஊனம்' கேடு எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; இதனைக் குறைவு எனப் பொருள்படும் 'ஊந' என்னும் வடசொற்றிரிபு என்பாரும் உளர்.

சிவானந்தம் பெருக்கெடுத்த காலத்து அதன்கட் படிந்த உயிரின் மலக்கறை முற்றுங் கழுவப்பட்டு ஒழிதலின் ஊனந் தன்னை ஒருங்குடனறுக்கும் ஆனந்தம்’ என்றார்.

6

ஆறுஆக' என்பது கடைக்குறைந்து ‘ஆறா’ என நின்றது. ஆறாக' என்பதற்கு வழியாக என உரைப்பினுமாம்.

'மாப்பெருங் கருணையன்' என்பதில் அடைமொழி களிரண்டும் பொருட்சிறப்பு நோக்கி வந்தமையின்

66

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/167&oldid=1589393" இலிருந்து மீள்விக்கப்பட்டது