உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

135

பொருளிரு சொற் பிரிவில வரையார்” என்பதனால் அமைக்கப் படும்.* (தொல்காப்பியம் எச்சவியல் 64)

நாததத்துவம் ஒலிவடிவினதாதலுத், அதுவே இறைவற்குப் பறையாக உருவகப்படுத்தப்படுதலும் மேலே விளக்கிப் போந்தாம்.

66

'நவின்று' பலகாலும் பயின்று எனப் பொருள்படுதலை மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் என்பதற்கு *நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் காண்க.

அழுக்கடையாமல் ஆண்டுகொண் டருள்பவன்

110 கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்

-

அழுக்கு அடையாமல் உயிர்கள் மும்மலங்களிற் சேராமைப் பொருட்டு, ஆண்டுகொண்டு அருள்பவன் - அவ்வுயிர்களை அடிமைகொண்டு அருள்செய்யும் பெருமான், கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்- முத்தலை வேலைக் கையின்கட் பிடித்தருளியும் என்றவாறு.

‘அழுக்கு’ஈண்மு ஆணவம் மாயை கன்மம் என்னும்

மூன்றழுக்கு.

கழுக்கடை, கழுமுள், முத்தலைவேல் என்பன ஒரு பொருட் கிளவிகள்; திவாகரம் பிங்கலந்தைகளிற் காண்க. உயிர்கள் மும்மலங்களினின்று விடுபடுதற்பொருட்டு இறைவன் ச்சாஞானக்கிரியாசக்திகள் உடையனாயிருத்தலின் அம்மூன்று சக்திகளையும் முத்தலைவேலாக உருவகப்படுத்திக் கூறுவர்.

மூல மாகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை

ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும்

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் எல்லாத் துன்பங் கட்கும் முதலாகிய மூன்று மலங்கள் என்னுங் கயிற்றை அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி -பரிசுத்தமான அருட்டிரு மேனியையுடைய சுடர்விரியும் பேரொளியானவன், காதலன் மனக்கினிய கணவனாகி, கழுநீர்மலை - செங் கழுநீர்

ஆகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/168&oldid=1589395" இலிருந்து மீள்விக்கப்பட்டது