உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் – 25

-

மாலையினை, ஏல் உடைத்தாக பொருத்தம் உடைத்தாக, எழில்பெற அணிந்தும் அழகுபெற மேற்கொண்டும் என்றவாறு.

-

மூன்றுமலங்களும் துன்பத்தைத் தரும் முதலாயிருத்தலின் மூலமாகிய மும்மலம்' என்றார். இனிப் பிறவிப்பிணிக்குக் காரணமாகிய மும்மலம் என்றுரைப்பாரும் உளர். உயிர்கள் பிறவிக்கு வாராதமுன்னம் ஆணவமலம் அவற்றை வருத்துதல் உண்மையால் அங்ஙனம் உரைத்தல் பொருந்தா தென்க.

மும்மலங்களாவன : ஆணவம் மாயை கன்மம் என்பன; இவற்றுள் ஆணவம் என்பது உயிர்களோடு இயற்கையாய் உடன் நின்று அவற்றின் அறிவு செயல் வேட்கைகளை விளங்க வொட்டாது மறைப்பது; அதனால் இது ‘சகசமலம்’ என்றும் வழங்கப்படும். இது திருவாசகம் முதலான பழைய நூல்களி லெல்லாம் ‘மலம்’ என்னும் பெயரினாலும், இருக்கு முதலான பழைய ஆரிய மறைகளிற் ‘பாசம்' என்னும் பெயரினாலும், வழங்கப்படுகின்றது. ஞானபாதப் பொருளை விரித்துரைக்கும் பௌட்கரம் மிருகேந்திரம் முதலான ஆகமங்களினுங்கூட இது 'மலம்' என்று கூறப்படுகிறதேயல்லாமல் ‘ஆணவம்' என்னும் பெயராற் கூறப்படுதலைக் கண்டிலம் சைவசித்தாந்த நுண் பொருட் களஞ்சியமாய்த் திகழும் சிவஞானபோதத்திலும் இது பெரும்பாலும் 'மலம்' எனவே வைத்துக் கூறப்படுகின்றது. சிவஞான போதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்துப் “புண்ணிய பாவம்” என்னுஞ் செய்யுளில் மட்டும் “அஞ்ஞானங் காட்டும் இவ்வாணவமும்” என ‘ஆணவம்' என்னும் பெயர் ஒரே ஒருகால்

வந்தது.

ஞ்

அதனால், ஆணவம் என்னும் இச் சொல் திருமூல நாயனார் காலந் தொட்டிருந்த சான்றோரால் தமிழ் மொழி யினின்றும் எடுதது வழங்கப்பட்ட தனித் தமிழ்ச் சொல்லேயா மென்பது பெறுதும். இனிப் பிற்றை ஞான்றிருந்த உரைகாரர் இம்மலம் ஆன்மாவை அணுத்தன்மைப் படுத்துதலின் இஃது ஆணவம் என்னும் பெயர்த்தாயிற்று என்றுரைத்து இதனை வடசொல்லாக்கினார். ஆன்மாச் சிவவியாபகத்தினுள் வியாபக மாய்க் கிடக்கும் அறிவுப் பொருளாகலின் அஃது ஏனைச் சடப் பொருள் போல ஆணவ மலத்தாற் சுருக்கப்பட்டுச் சிறிதாம் என்றல் சைவசித்தாந்தத்திற்கு அடாது. ஆணவம் ஆன்ம வியாபகம் முழுதும் உடனியைந்து வியாபித்து அதன் அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/169&oldid=1589397" இலிருந்து மீள்விக்கப்பட்டது