உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

137

செயல் வேட்கைகளை மறைத்தபடியாய்க் கிடக்குமென்றே அறிவு நூல்களெல்லாம் உரைப்பக் காண்டும். ஆன்ம வியாப கத்தை மறைக்கும் ஆணவமும் வியாபகப்பொருளாய் யிருத் தலின், இரண்டு வியாபகப் பொருள்களில் ஒன்று மற்றொன் றனைச் சுருக்கிற்றென்றல் ஒருவாற்றானும் அமையாது. அங்ங னஞ் சுருக்குமாயின் சுருக்கும் பொருளுஞ் சிறிதாகிச் சுருக்கப் படும் பொருளும் சிறிதாகி வியாபகத்தன்மை கெட்டுப்போம்.

அதனால், ஆணவம் ஆன்மாவை அணுத்தன்மைப்படுத்து மென்றல் சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்குப் பெரிதும் முரணாமென்க.

அற்றேல், திருமந்திரம் முதலான உண்மை நூல்களில் உயிரின் அளவை அணுவாக்கிக் கூறுதல் என்னையெனின்; ஆணவத்தால் முழுதும் மறைவுண்ட உயிரின் செயல் கலையால் அணுவளவு விளங்கித்தான் ஓர் உயிர்ப் பொருளெனத் தன்னையுஞ் சிறிது காட்டுதலின் அவ்வியல்பு பற்றி அதனை அணுவென்று கூறினாரல்லது பிறிதில்லை யென்க. இவ்வாற்றால் ‘ஆணவம்' என்னுஞ் சொல்லுக்கு அணுத் தன்மைப் படுத்துவதெனப் பொருள் கொண்டு அதனை வடசொல் ஆக்குவார் கருத்து நிரம்பு மாறில்லையென் றுணர்க. அல்லதூஉம், ஆணவம் என்னுஞ் சொல்லுக்கு ஆணவமலம் என்னும் பொருள் பழைய வட நூல்களுள் யாண்டும் வழங்கப்படாமையுங் கடைப்பிடிக்க. தமிழிற் செருக்கு என்னும் பொருள்பட வழங்கும் 'ஆண்மை' என்னுஞ் சொற்போல ஆணவம் என்பதும் செருக்கு என்னும் பொருளில் வழங்கக் காண்டலின், இஃது ஆண்மை என்னும் பண்புச் சொல்லின் அடியாகப் பிறந்ததென்றே துணியப்படும்.

இனி, ஆணவம் என்னுஞ் சிறப்புப் பெயரால் தமிழ் மொழியில் வழங்கப்படும் அறியாமையைச் செய்யும் பொருள் வட மொழியிற் பௌட்கரம் மிருகேந்திரம் முதலான ஆகம நூல்களில் யாண்டும் 'மலம்' என்னும் பெயரினாலேயே கூறப்படுகின்றது; சைவசித்தாந்த முழுமுதற் றமிழ் நூலாகிய சிவஞான போதத்தும் ஓரிடத்துத் தவிர ஏனையிடங்களி னல்லாம் இது மலம் என்ற சொல்லான்மட்டுமே வைத்து விளங்கப்படுகின்றது. சிவஞானபோதம் திருமந்திரம் முதலிய நூல்கட்கும் முற்பட்டு மிகப் பழையதாகிய இத்திருவாசகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/170&oldid=1589398" இலிருந்து மீள்விக்கப்பட்டது