உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

❖ - 25❖ மறைமலையம் - 25

செம்பொருணூலிலும் இது ‘மலம்’ என்னுஞ் சொல்லினா லேயே குறிக்கப்படுகின்றது. இவ்வழக்குகளை உற்று நோக்குங் கால் முதற் பொருளும் இரு வினையும் வடமொழி தென்மொழி யிலுள்ள தொன்னூல்களில் மாயை கன்மம் என்னுஞ் சிறப்புப் பெயர்களான் வழங்கப்படுமாறு போல, ஆணவமும் அவற்றின் கண் ‘மலம்’ என்னுஞ் சிறப்புப் பெயரினாலேயே வழங்கப்படுவ தாயிற்றென்னும் உண்மை நன்கு புலனாம். எனவே, பண்டை யாசிரியரால் 'மலம்' என்னுஞ்சொல் ஆணவ மலத்திற்கே சிறப்புப் பெயராய்க் கொள்ளப்பட்ட உண்மை பெரிதுங் குறிக் கொளற்பாற்று. இப்பெயர் ஆணவமலத்திற்கே சிறப்பா மென்பது.

"நெல்லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்”

என்னுஞ் சிவஞானபோதத் திருவெண்பாவானும்,

"மலமென வேறொன்றில்லை மாயாகா ரியம தென்னில் இலகுயிர்க் கிச்சை ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை விலகிடும் மலம் இவற்றை வேறுமன்றதுவே றாகி உலகுடல் கரணம் ஆகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே

எனவும்,

“போதகா ரியம்ம றைத்துநின்றது புகன்ம லங்காண் ஓதலாங் குணமு மாக உயிரினுள் விரவ லாலே காதலால் அவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை ஆதலால் இரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே'

எனவும் மலத்திற்கும் மாயைக்கும் வேறுபாடு நன்கு தெரித்தோதிய சிவஞானசித்தித் திருவிருத்தங்களானும் தெளிய விளங்கும்.

இனி, ஆணவம் ஒன்றுமே அங்ஙனம் மலமெனும் பெயரால் விதந்தெடுத்து உரைக்கப்பட்டவா றென்னையெனின்; இஃதொன்றுமே உயிரின் அறிவு செயல் வேட்கைகளை முழுதும் மறைத்து எல்லாத் துன்பங்கட்கும் எல்ல வாலாமைகட்கும் எல்லாக் குற்றங்கட்குங் காரணமாய் நிற்றலின் இது ‘மூலமலம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/171&oldid=1589400" இலிருந்து மீள்விக்கப்பட்டது