உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

139

என்றும், “பொல்லாத ஆணவம்” என்றும் நூல்களால் இழிந் துரைக்கப்படுவதானமையின் இதுமட்டுமே ‘மலம்' எனப் பெயர் படைத்தற்கு உரிமையுடைத்தா மென்பதூஉம், மாயையும் வினையும் அம்மல வலியை ஒடுக்கி உயிரின் அறிவை எழுப்பு வதற்குக் கருவிகளாயிருத்தலின் அவை அதுபோல் 'மலம்' என்னுஞ் சிறப்புப் பெயர் பெறுவதற்கு உரியவாகா வென்ப தூஉம் பகுத்துணர்ந்து கொள்ளற் பாலனவாம்.

அற்றேல், மாயை கன்மங்கள் ஆணவமலத்தோடு ஒருங்கு வைத்து ‘மும் மலம்' என்று இந்நூலினும் பிறநூல்களினும் ஓதப்படுதல் என்னையெனின்; ஆணவமலம் வியாபகப் பொருளென்பது சைவசித்தாந்த நூல்கட்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின், அஃது உயிர்களின் மட்டுமேயன்றி மாயை கன்மங்களினும் விரவி நிற்குமென்பது பெற்றாம்; பெறவே ஆணவமலத்தின் சேர்க்கை யால் அவை யிரண்டும் மலத்தன்மையும் எய்துதலின் அதுபற்றி ஆணவ மலத்தோடு உடன்வைத்து ‘மும்மலம்’ என்று கூறப் படுவவாயின.

இனி, ஒருசாரார் “மாயை சுத்தம் அசுத்தம் என இரு ரு திறப்படுதலின், சுத்தமாயை என்றுந் தூயதாயும் அசுத்த மாயை என்றும் வாலாமையுடையதாயும் இருத்தலே அவற்றின் இயற்கை. அசுத்தமாயை அங்ஙனமாயது ஆணவச் சேர்க்கை யான் வந்தது அன்று” எனச் சற்காரியவாதங் கூறுஞ் சைவ சித்தாந்தத்தொடு முரணி வழக்குரை நிகழ்த்துவர். ஆணவம் அறியாமைக்கேதுவாய் இருள்போல்வதெனவும், மாயை அறிவுவிளக்கத்திற்கேதுவாய் அவ்விருளினைத் துரக்கும் ஒளிபோல்வதெனவும் “மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதாம் ஒன்றை” “இரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே" என்றற் றொடக்கத்துத் திருமொழிகளால் நன்கு தெருட்டப்படுதலின் மாயைதன்னியல்பில் அசுத்தப்பொருளா

காமை இனிதுவிளங்கும்.

அஃது இயற்கையில் அசுத்தப் பொருளாயிருப்பின் அது விளக்குப் போல் ஆணவஇருளைத் துரந்து அறி அறிவை விளக்குமென்றல் பொருந்தாது; என்னை? ஒன்றினொன்று மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒருபொருட்கு உளவா மென்றல் சற்காரியவாதங் கொள்ளும் சைவசித்தாந் தத்திற்கு ஒருவாற்றானும் அடாதென்பதற்கு “ஒருதன்மை அயல்புக்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/172&oldid=1589401" இலிருந்து மீள்விக்கப்பட்டது