உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

140

  • மறைமலையம் - 25

தாருவனுக் கிரண்டு செய்தி வருவதென்” என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழியே சான்றாமாகலின் என்க. இவ்வாற்றால், மாயையின்கட் காணப்படும் வாலா மைக்குக் காரணம் அதனோடு விரவிக் கிடக்கும் ஆணவ மலமே யல்லாமல், தூயவியல்புள்ள மாயை யாகாதென்றுணர்க. இவ்வுண்மை அறிவுத்தற் பொருட்டன்றே சிவஞான முனிவரர் தாம் வகுத்தருளிய சிவஞானபோதமாபாடியத்தின் கண் 'அஃதங்ஙனமாக, ஏதுவின்கண் மும்மலங்களும் அஞ்ஞானத்தை உணர்த்துமெனக் கூறி, ஈண்டு ஆணவ மாத்திரையே அஞ் ஞானங் காட்டுமென்றல் மலைவாமாலெனின், அற்றற்று; அஞ் ஞானங் காட்டுதல் மாயை கன்மங்கட்கு ஆணவமலச்சார் வானாகிய செயற்கை, ஆணவமலத்திற்கு அஃது இயற்கை, என்னும் பொதுச் சிறப்பாமா றுணர்த்துதற்கு ஆண்டுப்பொது வகையாற் கூறிப் போந்தனை ஈண்டுச் சிறந்தெடுத்தோதின ராகலான் என்பது”* (சிவஞானபோதம் 12ஆம் சூத்திரம்) என்று தெளிய எடுத்தோதினார்.

66

இன்னும் அவர் தமது சிவஞான சித்தியுரையில் “நித்தமாய் அருவாய்” என்று மாயையின் இலக்கணம் தொகுத்துக் கூறுந் திருவிருத் தத்தில் “வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே” என்னும் அடிக்கு விதப்புரை கூறுகின்றுழி த் தன்மைத்தாகிய மாயை ஆணவமலம் போல மயக்கமே செய்யும் என்னுஞ் சைவருள் ஒரு சாராரை மறுத்தற்பாருட்டு, மயக்கமும் செய்யும்” என்றுங் கூறினார். செய்யுளாகலின் முறைபிறழ வைக்கப்பட்டன. ஈண்டு மயக்கம் என்றது விபரீதவுணர்வை, ‘மயக்கமும்’ என்னும் உம்மை அது தன்னியல்புஅன்மை உணர நின்றது என்று மாயையின் தூய இயல்பு நன்கு தெருட்டி யருளினார்.

இன்னும் அவர் “விந்துவின் மாயையாகி என்னுந் திருவிருத்தவுரையில் “அவற்றுள், மல கன்மங்களோடு விரவாது முதற்காரணமாய் நிற்பது சுத்தமாயை யென்றும், அஃது ஏனை இரண்டனையும் வியாபித்து மேலாய் நிற்ப, அவ்விந்துவின் கீழாயடங்கி மல கன்மங்களோடு விரவி முதற்காரணமாவது அசுத்தமாயை யென்றும், அவ்வசுத்த மாயையது தூல பரிணாமமாய்த் தோன்றுவது பிரகிருதி மாயையென்றுங் கூறப்படும்” என்று மூவகை மாயைகளின் வேறுபாடுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/173&oldid=1589402" இலிருந்து மீள்விக்கப்பட்டது