உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

141

விளக்கியவாற்றான் அசுத்தமாயை அவ்வாறு அசுத்தமாயது மலத்தின் சேர்க்கையினாலேயா மென்பது ஐயமின்றித் துணியப்படும். மேலும் அகத்தே அறிவுப் பொருளாகிய உயிரின் கட்டொன்றுதொட்டு விரவிநிற்கும் மலத்தின் சேர்க்கையை விளக்கிக்காட்டுதற் பொருட்டுப் புறத்தே அறிவில் பொருளாகிய செம்பின்கண் விரவிநிற்கும் களிம்பினை அறிவுநூல்கள் உவமையாக எடுத்துக் காட்டுதலானும், உயிரினைப்பற்றிய மலந்தீர்ந்து அது தூய்தாந்தன்மைக்குச் "செம்பிற் காணலுறுங் களிம்பு இரதகுளிகை பரிசிக்கக் கழியுஞ் செம்புருநிற்கக் கண்டாமன்றே* (சிவஞான சித்தியார் 11ஆம் சூத்திரம் 5) எனச் செம்பு களிம்பிற் றீர்ந்து தூய பொன்னா மாற்றினை ஒப்பாக எடுத்துரைத்தலானும் செம்பின்கட் களிம் பாயும் உயிரின்கண் அறியாமையாயும் நிற்பது ஆணவ மலமேயாமென்று ஆராய்ந்து உணர்ந்துகொள்க.

அற்றாயின், வியாபகப் பொருளாகிய ஆணவமலம் சுத்த மாயையினையும் பொன்னையும் பற்றாமை என்னையெனின்; அவற்றின்கண் இறைவனது அருளொளி முனைத்து விளங்கு தலால், அஃது அவற்றைப் பற்றமாட்டாவாயிற் றென்க. அங்ஙனம் உரைப்பின் ஆணவம் வியாபகப் பொருளென்றது வழுவாமா லெனின்; அற்றன்று, சுத்த மாயையினும் பொன் னிலுங்கூட அஃது ஊடுருவி நிற்பினும் ஆண்டு அது தன்வலி மடங்கிக் கிடக்கும்; எதுபோல வெனின்; மேற்செல்லுங் கல் முதலாகிய பொருள்களை ஈர்க்கும் இந்நிலவுலகத்தின் ஆற்றல் மேல்எழும் நுண்ணிய நீர்வளியைத் தன்கண் ஈர்க்கமாட்டாமை பற்றி ஆண்டு அஃது இல்லையென்றால் அமையாமை போல வென்பது. இந்நில வுலகத்தின் ஆற்றல் எங்கும் நிறைந்து வியாபகமாயிருப்பினும் தன்னாற் பற்றப்படும் பொருள்களின் மட்டுமே தான் உண்டென்பதனைப் புலப்படக்காட்டித் தன்னாற் பற்றப்படாதவற்றின்கட்டான் புலப்படாமற் பரவி நிற்கும் இந்நிகழ்ச்சியின் வைத்து ஆணவ மலம் சுத்தமாயை பொன் முதலியவற்றிற் புலப்படாது வலிமடங்கிக் கிடக்கு மியல்பினைத் தெரிந்துகொள்க.

அற்றாயின், சுத்தமாயையில் இறைவனதொளி முனைத்து விளங்குதற்கும், அசுத்தமாயையில் அஃதங்ஙனம் விளங்கா மைக்கும் ஏது வென்னையெனின்; ஞாயிற்றின் ஒளி பளிங்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/174&oldid=1589403" இலிருந்து மீள்விக்கப்பட்டது