உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

145

பண்டு தொட்டே கடவுட்டன்மை பெற்றவர்களாய் அவ்வத் தத்துவ புவனங்களில் இறைவனருளால் அதிகாரஞ் செலுத்து தலின் இங்ஙனங் கூறினார். ஈண்டுக் கூறப்பட்ட எல்லாக் கடவுளர்க்கும் முதல்வனாதல்பற்றித் தேவதேவன் அல்லது மகாதேவன் என்னும் பெயர் சிவபிரான் ஒருவற்கே உரித்தாதல் "தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்தம் தேவதாநாம் பரமஞ்ச தைவதம், பதிம்பதீ நாம் பரமம் பரஸ்தாத்விதாமதேவம் புவநேச மீட்யம்” என்னுஞ் சுவேதாசுவதரோபநிடத மந்திரத்தானும்

உணர்க.

இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி

அருளிய பெருமை அருண்மலை யாகவும்

-

இருள்கடிந்து அருளிய - அறியாமையிருளைப் போக்கி யருளின, இன்ப ஊர்தி பேரின்பத்தையே தான் ஊர்ந்து செல்லும் ஏறாகவும், அருளிய பெருமை அருள் மலையாகவும் - எவ்வுயிர்க்கும் அருள்செய்த பேர் அருளேதான் அமர்ந்திருக்கும் மலையாகவும் கொண்டருளி என்றவாறு.

உயிரின்கட் பேரின்பம் பெருகியெழுஞான்று அதனைப் பற்றிய அறியாமை வலியொடுங்கி ஒழிதலின் 'இருள் கடிந் தருளிய இன்பம்' என்றும், இப்பேரின்பத்திற்கு முதல்வனாவான் இறைவனேயாத லுணர்த்துவார் 'இன்ப ஊர்தி' என்றும் எண்ணுள் அடங்காத உயிர்கட்கெல்லாம் அவன் செய்யும் அருள் மிகப் பெரிதாயிருத்தலின் அதுவே அவற்கு இருக்கை யாகிய மலையென்றுணர்த்துவார் ‘அருண்மலை' என்றும் ஓதினார். இவ்வாறு அடிகள் ஓதியாவாற்றால், இறைவற்கு ஊர்தியாக உருவகப்படுத்திச் சொல்லப்படும் ஏறாவது பேரின்பமே யல்லது பிறிதன்று என்பதூஉம் அவனிருக்கும் வெள்ளி மலையாகச் சொல்லப் படுவது அவனது பேரருளே யல்லாமற் பிறிதன்று என்பதூஉம் பெற்றாம்.

‘கடிந்து’ போக்கி யென்னும் பொருட்டாதல் “கொடிது கடிந்து கோல் திருத்தி” என்பதன்* (புறநானூறு 17) உரையிற்

காண்க.

'பெருமை அருள்' என்னும் புணர்ச்சி “தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்” என்புழிப்போல வேறு பாடுறாமல் இயல்பாய் நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/178&oldid=1589408" இலிருந்து மீள்விக்கப்பட்டது