உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 125

-

மறைமலையம் - 25

எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி

எப்பெருந் தன்மையும் - எவ்வளவு பெருந்தன்மையையும், எவர் திறமும் - எவரெவர் கூறுபாட்டினையும், அப்பரிச தனால் ஆண்டுகொண்டு அருளி - அவ்வவற்றிற்கு ஏற்ற தன்மை களால் அடிமை கொண்டருளி என்றவாறு.

L

ஒருமலம் உடைய விஞ்ஞானகலர் முதல் மும்மலம் உடைய சகலர் ஈறான முத்திறத் துயிர்களின் தன்மைகளும் கூறுபாடு களும் பலவேறு வகைப்படுதலின் அவரவர்க் கிசைந்தபடியால் எல்லாம் வல்ல இறைவன் அவரையெல்லாம் அடிமைகொண்டு அருள் செய்வான் என்பது. இம் முக்கூற்றுயிர்கட்கும் இறைவன் அருள் புரியுமாற்றினை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்,

“மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய் – மெய்ஞ்ஞானம் பின்உணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு முன்உணர்த்துந் தான்குருவாய் முன்

என்று* (சிவஞானபோதம் 8ஆம் சூத்திரம் 3) அருளிச் செய்தமையாற் கண்டுகொள்க. இவருள் விஞ்ஞானகலரும் பிரளயாகலரும் ஏனைச் சகலரினும் பார்க்கப் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்தவராகலின் அவர்தம்மை நோக்கி ‘எப் பருந்தன்மையும்' என்றும், சகலரை நோக்கி 'எவ்வெவர் திறமும்' என்றும் அருளிச்செய்தார்.

திறம் -கூறுபாடு. இப்பொருட்டாதல் “பற்றலிலியரோ நிற்றிறம் சிறக்க” என்பதன்* (புறநானூறு 6) உரையிற் காண்க. சகலரிற் பல கூறுபாடுகள் உண்மையால் இங்ஙனங் கூறினார்.

நாயி னேனை நலமலி தில்லையுட் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித் தருளி

130 அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்

நாயினேனை - நாயிற்கடைப்பட்ட அடியேனை, நலம் மலிதில்லையுள் - நன்மைமலிந்த தில்லைமாநகருள், கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என - அழகு நிறைந்த அம்பலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/179&oldid=1589409" இலிருந்து மீள்விக்கப்பட்டது