உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

147

கண்ணே வருவாயாக வென்று சொல்லி, ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி - இசைவானபடியாய் ஏழையோனை இந்நிலத்தி லேயே போக்கிவிட்டு, அன்று உடன்சென்ற - அடியேனை இந்நிலத்தே விட்டுச் சென்ற அந்நாளில் தன்னோடுகூடச் சென்ற, அருள்பெறும் அடியவர் - தன் அருளைப் பெறுதற்குரிய அடியார்கள், ஒன்ற ஒன்ற - தன்னோடு ஒருங்குபொருந்த, உடன் கலந்து அருளியும் - அவரோடு இரண்டறக் கலந்தருளியும் என்றவாறு.

து சிவபெருமான் ஞானாசிரியன் வடிவிற் றோன்றித் திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலிலே பன்மாணவர் புடை சூழ வீற்றிருந்து அடிகளை ஆட்கொண்டருளியபின் அவரை விடுத்துத் தன்மாணவரோடும் மறைந்த ஞான்று ‘நீ தில்லை அம்பலத்தின் கண்ணே வருக' வென்று கட்டளை தந்தமையால், அதனை அடிகள் நினைந்து ஈண்டுக் கூறிய வாறாம்.

'என்னை யுடன்கொண்டுபோதற்கு யான் தகுதியல்லாமை கண்டு ‘அம்பலத்தின் கண்ணே வருக' வென்று யான் வருந்த வாறு இசைவாகக் கூறி என்னை இந்நிலவுலகத்திற் புறந்தள்ளிச் சென்றனனே!” என்று அடிகள் இறைவன்மேல் வருந்திக் கூறினாரென்க.

உட ன்சென்ற அடியவர் அருள்பெறுந் தகுதிப்பாடு மிகுதியும் உடையராதலால் அவரோடு இரண்டறக் கலந்து நின்றான் என்பது பின்னிரண்டடிகளிற் கூறினார்.

கோலம் - அழகு; பிங்கலந்தையிற் காண்க.

பாது

மன்று; “பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை (புறநானூறு 89) என்பதன் உரையிற் காண்க. பொது, பொதியில், மன்று, மன்றம், அம்பலம் என்பன ஒரு பொருட்கிளவிகள்.

ஏல - பொருந்த.

‘ஒன்ற ஒன்ற’ என்னும் வினையெச்ச அடுக்குப் பிரிவறக் கலத்தலை உணர்த்துகின்றது.

எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/180&oldid=1589411" இலிருந்து மீள்விக்கப்பட்டது