உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

  • மறைமலையம் - 25

மாலது ஆகி மயக்கம் எய்தியும்

பூதலம் அதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் 135 கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி நாத நாத என்றழு தரற்றிப்

பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரம நாமகவென்

றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்

-

எய்தவந்திலாதார் எரியில் பாயவும் அங்ஙனம் அவனது அருளை அடைய வராதவர் தீயின்கட் பாயவும், மால்அது ஆகி வேட்கையிடையோர் ஆகி, மயக்கம் எய்தியும் - மயக்கம் அடைந்தும், பூதலம் அதனில் - இம் மண்ணின்மேல், வீழ்ந்து புரண்டு அலறியும் - விழுந்து புரண்டு கதறியும், கால்விசைத்து ஓடி - கால் விரைந்து ஓடி, கடல்புகமண்டி - கடலிலே புகுதற்கு மிக்குச்சென்று, நாத நாத என்று அழுது அரற்றி - தலைவனே! தலைவனே! என்று சொல்லி அழுது ஆரவாரித்து, பாதம் எய்தினர் பாதம் எய்தவும் - திருவடியை யடைந்தவர் அதனோடு பிரிவறக்கலத்தலைப் பெறவும், பதஞ்சலிக்கு அருளிய - பதஞ்சலி முனிவர்க்கு அருள்புரிந்த, பரம நாடக என்று - மேன்மைமிக்க கூத்தனே என்று சொல்லி, இதம் சலிப்பு எய்தநின்று - நெஞ்சம் - அயர்வு அடைய நின்று, ஏங்கினர் ஏங்கவும் - ஏங்கினவர் மேலும் மேலும் ஏக்கத்தை அடையவும் என்றவாறு.

மால்-வேட்கை; திவாகரத்துட் காண்க. விசை விரைவுப் பொருட்டாதல் பிங்கலந்தைகளுட் காண்க.

'மண்டி' மிக்குசென்று

திவாகரம்

சன்று என்று பொருளுரைப்பர்

புறநானூற்றுரைகாரர்.* (புறநானூறு 6)

அரற்றல் - ஆரவாரித்தல்; பிங்கலந்தையுட் காண்க.

நெஞ்சம் எனப் பொருள்படும் ஹ்ருதயம் எனும் வடசொல் இதயம் எனவும் இதம் எனவும் திரியும். எய்தியும் அலறியும் ஓடி மண்டி அரற்றிப் பாதம் எய்தினர் என இயைக்க.

பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் தனது திருக்கூத்துக் காட்டிய வரலாறு பின்னே ‘புலியூர்' என்பதன் பெயர்க்காரண வரலாறு கூறுகின்றுழிச் சேர்த்துரைப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/181&oldid=1589412" இலிருந்து மீள்விக்கப்பட்டது