உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

நவிலல்

❖ 25❖ மறைமலையம் - 25

-

பயிலல்; இப்பொருட்டாதல் “மறைநவில் அந்தணர்” என்பதன் உரையிற் காண்க.* (புறநானூறு 1)

‘கனிதரு' என்பதில் தரு உவம உருபின் பொருள்பட வந்த உவமவாசகம். ‘கனிதரு செவ்வாய்' என்னும் அடையை உமைக் குங் காளிக்குங் கூட்டுக; உமைக்கு அது சிறப்பாதல் பற்றி முன் வைத்தார்.

'நடநவில்' என்னும் வினைத்தொகை ‘இறைவன்' என்னும் பெயர்கொண்டு முடிந்தது; இத ‘மாட்டு' என்னுஞ் செய்யுளு றுப்பான் இங்ஙனம் முடிந்தது; என்னை?

"அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்’

وو

என்றார் ஆசிரியர் தொல்காப்பியராகலின். (தொல்காப்பியம் செய்யுளியல் 211) இத்திருவக வலினும் ஏனை இரண்டகவலினும் அகன்று கிடந்து பொருந்தும் பொருள் களை அணுகிய நிலையில் வத்து உரைக்கும் உரை இம் மாட்டென்னும் உறுப்பான் வந்ததென்று உணரல் வேண்டும்; இஃது அச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் கூறிய வுரையானும் அறியப்படும்.

இறைவன், கிழவோன் என்னும் பெயர்கள் சிவபெருமான் என்னும் ஒருபொருள் குறித்துப் ‘புக்கினிதருளினன்' என்னும் ஒருவினைகொண்டு முடிந்தன; என்னை?

“ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே"

என்றார் ஆசிரியராகலின்.*

இனித் தில்லைப்பொதுவில் இறைவன் திருக்குத்தியற்றிய வரலாறு ஒருசிறிது கூறுதும்; பண்டொருகால் மத்தியந்தின முனிவர் தாம் அரிதிற் பெற்ற புதல்வர்க்குக் கலைப்புலமை நிரம்பியபின்னர் அறிவுநூற் பொருள் முழுதும் உணர்த்தி, அவர் சிறந்ததோர் இடத்தே சென்று இறைவனை வழிபடுதற்கு விரும்பினமையால், அவரைத் தில்லைக்குச் செல்லுமாறு கற்பித்து விடுக்க, அவரும் ஆண்டுப் போந்து ஓர் அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/183&oldid=1589414" இலிருந்து மீள்விக்கப்பட்டது