உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

183

உளதெனக் கோடல் அதனை வழங்குதற்கும் பயன்படுத்திக் கோடற்குமேயாகலின் அவை யிரண்டுஞ் செய்யலாகாவழியும் அவையிரண்டுஞ் செய்தற் குரியார் செயலிழந்து கிடக்கும் வழியும் அதனை உளதெனக் கொண்டு சத்தெனக் கூறுதல் இயையாமையானும், சிவசத்தின் முன் அசத்தாய் விளக்கமின்றி யிருக்கும் அதனை அந்நிலையிற் சத்தென்றுரைத்தல் பொருந்தா மையானும் அவ்வுழி அதனை அசத்து என்று கூறியதன்றி அஃது இல்லாததொரு பொய்ப் பொருளென்றறிவித்தற்கு அவ்வுப நிடதமொழி எழுந்ததன்றென வுணர்க.

இனி, அவ்வசத்திலிருந்து சத்துப் போந்ததென்று என்னை யெனின், அசத்தென்றது இல்லாத வெறும் பொய்ப் பொருளா காமல் நுண்ணிய நிலையிலிருந்த மாயையேயாதல் மேலே றெப் பட்டமையின், அம்மாயையிலிருந்து உயிர்கட்குப் பயன்படுமாறு தோன்றிய உடம்பு உறுப்பு இடம் நுகர்பொருள் (தநு கரண புவன போகம்) என்னும் நான்குமே அவ்வாறு சத்தென்னும் பெயராற் றொகுத்துக் கூறப்பட்டன. இவை தம்மோடியைந்த உயிர்களின் அறிவை விளக்கித் தாமும் அவ்வறிவுக்குப் புலனாய் விளங்குதலால் தம் உண்மையைப் புலப்படக் காட்டும் அவை ‘சத்து' என வைத்து வழங்கப்படுதற்குப் பெரிதும் பொருத்த முடையவாதல் காண்க. இவ்வாற்றால் அச்சொற்றொடர் பொய்யிலிருந்து மெய் தோன்றியதென்னும் பொருளை உணர்த்தாமல், புலப்படாது. நுண்ணிய நிலையிலிருந்த மாயையிலிருந்து புலப்பட்ட பருப்பொருள்கள் தோன்றிய உலகத் தோற்ற முறையினையே தெரித்ததெனக் கடைப்பிடிக்க.

""

அற்றேல் அஃதங்ஙனமாக, இனிச் "சத்தே முதற்கண் இருந்தது; அஃது ஒன்றாய் அத்துவிதத் தன்மையுற்றிருந்தது என்று மேலெடுத்துக் காட்டிய உபநிடத வுரைப்பொரு ளென்னை யெனின், புலப்பட்ட பருப்பொருள்களான உடம்பு றுப்பு இடம் நுகர்பொருள் என்னும் நான்கும் புலப்படாத நுண்பொருண் மாயையில் ஒடுங்கிப்போக, அவற்றோடியைந்து அறிவு ஒருசிறிது விளங்கிய உயிர்களும் அவ்விளக்கம் மங்கி அங்ஙனமே ஒடுங்கிப்போக எல்லாம் அசத்தாய்க் காணப்படும் மாப்பேரூழிக் காலத்தே எல்லாம் வல்ல சிவம் ஒன்றுமே சத்தாய் நிற்குமாகலின் அச்சிவத்தையே அவ்வுபநிடதவுரை அங்ஙனந் தெரிப்ப தாயிற் றென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/216&oldid=1589448" இலிருந்து மீள்விக்கப்பட்டது