உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் - 25

களான மாயையும் உலககுமாய்த் திரியுமென்றல் பெரியதொர் இழுக்காம் என்க. அறிவில் பொருளாய உலகிற்கு முதற்காரண மாம் மாயைக்கும் அதனிற் பிறிதாகிய கடவுட்கும் உள்ள வேறுபாடு பகுத்துணர மாட்டாமல் மாயையைக் கடவுளாக்கி அதற்கு மேற்செல்ல மாட்டாமையின் அவர் மாயாவாதி யெனப் பண்டையோரால் இழித்துரைக்கப் படுவா ராயினர். “மாயா வாதம் அஸச் சாஸ்த்ரம் ப்ரச்சந்ந பௌத்தமேவக” என்னும் பத்மபுராணத் திருமொழியும் இது பற்றியே எழுந்தது.

அற்றேல் “அசத்தே முதற்கண் இருந்தது; அதிலிருந்து சத்துத் தோன்றிற்று” என்னும் உபநிடதச் சொற்றொடர்ப் பொருள் யாதெனிற் கூறுதும்: உலகங்களும் உலகத்துப் பொருள்களும் ஒருங்கழிந்து நுண்ணிய மாயையாய் டுங்கியவழி, அவற்றின் இருப்புக் காணவுங் கருதவும் படாத இயல்பிற்றாய் நிற்க, அவற்றை உடம்புகள் உறுப்புகள் இ டங்கள் நுகர்பொருள் களாகக் கொண்டு அறிவு விளங்கி வாழ்ந்த உயிர்களும் அங்ஙனமே ஒடுங்கி நிற்க, நிகழும் மாப்பேர் ஊழிக்காலத்து அம்மாயையை அறிவார் பிறர் இன்மையின் அஃது இல் பொருள் போல் வைத்து அவ்வாறு அசத்து என்றோதப்பட்டது; இச்சொல்லுக்கு விளங்காமை என்னும் பொருளும் வட மொழியில் உண்டாகலின் புலப்படாத நிலையிலிருந்த மாயையை அச்சொல்லாற் கூறுதல் வாய்ப் புடைத்தேயாமென்க. அவ்வூழிக்காலத்து ஒடுக்கத்திலிருந்த ஒக்குமாயினும்,

உயிர்கள் அதனை

அறியாவென்றல்

அஞ்ஞான்றும் தன்னிரை திரிபுறாது விளங்கும் இறைவன் அதனை அறிவானென்றல் ஒக்குமாலெனின், நம்மனோர் 'இதுகுடம்' இதுதடம் என்றறியு மாறுபோல் அறியும் சுட்டுணர்வும் அறிந்தது கொண்ட அறியா ததை உணரும் உய்த்துணர்வும் இறைவற்கு இலவாகலானும் இறப்ப நுண்ணிய பேரறிவாய்த் திகழும் அவனருளொளிமுன் மாயையாகிய அறிவில்பொருள் முனைத்துத் தோன்றாதா கலானும் அவன் அதனை அறிவானென்றால் ஒவ்வாது முற்றுணர்வாய் இருந்தாங்கிருந்து அதனை உணர்வனெனின், அவ்வாறுணரும் உணர்வும் மாயையை வேறாய் வைத்துணர் வதின்றி அதனோ டொருங்கியைந் துணர்வதேயா கலானும், அக்காலத்து உயிர்கள் அதனை யுணர்ந்து பயன்படுத்திக் கோடலும் அதனை ஒரு பெயரான் வழங்குதலுஞ் செய்யா வாகலானும், ஒரு பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/215&oldid=1589447" இலிருந்து மீள்விக்கப்பட்டது