உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

181

நிலத்தின் சேர்க்கை இன்றியமை யாததாயிருத்தலின் வித்தினின்று தோன்றிய அப்பயிரை வயலில் முளைத்த பயிரென்று வழங்குவர்; அது போலவென்பது. எனவே, மாயையிற் றோன்றிய உலகங்களை, அவ்வாறவை தோன்றுதற்கு இன்றியமையா நிமித்த காரணமாய் அதனோடு உடன்கலந்து அதனைத் தன்கண் அடக்கி நிற்கும் இறைவன்பால் நின்று தோன்றுவனவாகவும் மீள அவன்பால் ஒடுங்கு வனவாகவும் கூறல் வாய்ப்புடைத்தேயா மென்க. இந்நுட்பம் ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார்,

“வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவன்ஆம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான்

கொடுத்துக்

கூட்டானே மண்போற் குளிர்ந்து"

என்று தெளிந்துரைத்தவாறு பற்றி அறிந்து கொள்க. இந் நுணுக்கந் தேற மாட்டாத மாயாவாத நூலார் "அசத்தே முதற்கண் இருந்தது; அதிலிருந்து சத்துத் தோன்றிற்று” எனவும், (தைத்திரீய உபநிஷத் 2,6,1) சத்தே முதற்கண் இருந்தது; அஃது ஒன்றாய் அத்துவித் தன்மை யுற்றிருந்தது எனவும் (சாந்தோக்கிய உபநிஷத் 6,2,1) உபநிடதங்கள் ஒன்றோடொன்று மாறு பாடுறுவன போற் கூறுஞ் சொற்றொடர்ப் பொருளொரு மையறிந்து கொளுவ மாட்டாமையின், இறைவனே உலகங் களுக்கு முதற் காரணப் பொருளாமெனக் கொண்டு பெரிதும் இழுக்கினார்.

அறிவில் பொருள்களான பருப்பொருளுலகங்கள் கரைந்து மறைந்தவழி அவை நுண்ணிய அறிவில் பொருளான மாயை யாய் ஒடுங்குமேயல்லாது, அறிவுப் பொருளான கடவுளாக மாறுதல் ஒருவாற்றானும் செல்லாது; என்னை? அறிவில் பொருள் ஒன்றே புலப்படாத நுண்ணிய உருவில் மாயை யெனவும், புலப்பட்ட பருவடிவில் உலகம் எனவும் வைத்து இருவேறு வகைப்படுத்து உரைக்கப்படுமாயினும், அவை யிரண்டன் றன்மையை ஆராயும்வழி அவை பொருளால் ஒன்றேயாமென்பது நன்கு பெறப்படுமாகலினென்பது. மற்றுக் கடவுளோ எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்கும் பேரறிவுப் பொருளாகலின் அது தன் றன்மைகெட்டு அறிவில் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/214&oldid=1589446" இலிருந்து மீள்விக்கப்பட்டது