உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

  • மறைமலையம் - 25

உள்ள வன்மையெல்லாம் அதன் வித்தின்கண் ஒடுங்க, மீண்டும் அவ்வித்தினின்றே அம்மரம் முளைத்தல் கண்கூடாய் அறியக் கிடத்தல்போல, முதல்வனால் அழிக்கப் பட்டு அவன்கண் ஒடுங்கிய உலகம் மீள உளதாங்கால், அவன்கண் நின்றே போதரும் என்க. இவ்வியல்பு ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் இனி ஒடுங்கிய சங்காரத் தினல்லது உற்பத்தி

66

இல்லை” எனவும்,

66

இலயித்த தன்னில்இல யித்ததாம்ம லத்தால்

இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த தத்திதியில் என்னின் அழியா தவைஅழிவ தத்திதியும் ஆதியுமாம் அங்கு

எனவும் அருளிச் செய்த வாற்றால் நன்கு உணரப்படும்

அற்றேல், உலகங்களுக்கெல்லாம் முதற்பொருளாவது மாயையேயாதலான் அவை ஒடுங்குங்கால் அம்மாயையில் ஒடுங்கி, மீண்டும் உளவாங்கால் அம்மாயையினின்றும் உளவாமென்றலே பொருத்தம் உடைமையின், அதனின்வேறாக அவை இறைவனில் ஒடுங்கிப் பெயர்த்தும் அவன்பால் நின்றே தோன்றுமென்றல் அமையாதாம் பிறவெனின்; அற்றன்று, இறைவன் ஒரு வரம்புடைப் பொருளாய், மாயையைப் பிரிந்து வேறாய்த் தனி நிற்பான் அல்லன்.

அவன் நுண்ணியவற்றி லெல்லாம் நுண்ணிய னாகலின் மாயையின் உள்ளும் புறம்பும் நிறைந்து நிற்பன்; நிற்கவே, மாயை அவனது நிறைவின்கண் அடங்கிநின்று அவன்றன் ஆற்றலால் உந்தப்பட்டு உலகங்களைத் தோற்றுவித்தலும் மீள அவற்றைத் தன்கண் ஒடுக்குவித்தலும் செய்யும். இவ்வாறு தன்னோடு உடன் விரவிநிற்கும் இறைவன் செயலாலன்றித் தானாகவே மாறை ஒன்றைப் பிறப்பித்தலும் ஒடுக்குதலுஞ் செய்யமாட்டாதாகலின், மாயையில் ஒடுங்கித் தோன்றும் உலகங்களை அதனோடு

ன்விராய் நிற்கும் இறைவனில் ஒடுங்கித் தோன்றுவனவாக மெய்ந்நூல்கள் அறிவுறுப்பவாயின. யாங்ஙனமெனின், நெற் பயிர் நெல்லாகிய வித்தினின்று முளைப்பதே யாயினும் அவ்வித்து நிலமாகிய வயலுட் கிடந்துழி யன்றி அஃது அதன்கண் நின்று முளையாது; நென் முளைத்தற்கு வயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/213&oldid=1589445" இலிருந்து மீள்விக்கப்பட்டது