உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

'உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் குலகம் ஓத

179

வரைத்தொரு வனுக்கே ஆக்கி வைத்ததிங் கென்னை யென்னின் விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே'

என்று சிவஞானசித்தியாரிலும் இனிது விளக்கப்பட்ட காண்க.

அற்றேல், “தேவர்க்கோ அறியாத தேவ தேவன், செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை, மூவர்கோ னாய்நின்ற முதல்வன்" என்று அடிகள் பிறாண்டும் ஓதுமாறுபோல அழித்தற் றொழிலைச் செய்யும் சங்கார உருத்திரனையும் ஈண்டெடுத்துக் குறிப்பிடாமை என்னையெனின்; புராணங் களும் கூறப்படும் “சீகண்டருத்திரக் குரிய வடிவங்களும் பெயர் களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்ப உளவென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின்" (சிவஞான சித்தியார் சிவஞான முனிவருரை 1ஆம் சூத்திரம் 53ஆம் செய்யுள்) அவ்வுருத்திரனுக்குரிய சங்காரத் தொழில் முதல்வன் றொழி லாய் அடங்குதல்பற்றி அவனையும் அவன் செய்யும் அத் தொழிலினையும் ஈண்டு வேறுபிரித்து ஓதிற்றிலர்.

வலியுடையது

று

அவ்வாறுரைப்பின் முதல்வன் அழித்தற் றொழில் ஒன்றற்கே உரியனாம் போலும் என ஐயுறக்கிடக்குமாலெனின், அற்றன்று, அழித்தற்றொழிலின் மிக்க பிறிதில்லை; உலகத்தின்கண் எத்துணை வலியபொருள் களேனும் எத்துணை வலிய உயிர்களேனும் அவையெல்லாம் அழித்தற் றொழில் நிகழுங்கால் அதன்முன் நிற்கலாற்றாது கெட்டு அழிந்து மறைந்து போதல் கண்டா மன்றே. இவ்வாறு எல்லாத் தொழில்களையும் தன்கண் அடக்கி எவற்றினும் மிக்கதாய் நிற்கும் அவ்வழித்தற் றொழிரைச் செய்யவல்லவன் எல்லாம் வல்ல முதல்வன் ஒருவனேயன்றி ஏனையோர் அதனை மாட்டுவார் அல்லர். அவ்வாறு இறைவனது வரம்பிலாற்றலைப் புலப்படும் சிறப்புடைமை பற்றியே சங்காரத் தொழிலினை இறைவற்குச் சிறப்பாக எடுத்து வழங்குப. அங்ஙனம் வழங்கினும் ஏனை யிரண்டு தொழில்களும் அதன் வழியே பெறப்படுதல் திண்ணமாமென்க. என்னை? எது எதன்கண் ஒடுங்கிற்று அஃது அதன்கண் நின்றே தோன்றக் காண்டுமாகலின். ஒரு மரத்தினகண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/212&oldid=1589444" இலிருந்து மீள்விக்கப்பட்டது