உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

-

மறைமலையம் - 25

(மற்ச புராணம் 47) அக்கினி புராணம், அரிவமிசம் முதலிய நூல்கள் கிளந் தெடுத்துக் கூறுதலாலும் அவர் செருக்குற்றுத் தலையிழந்த வரலாற்றினைச் சதபதபிராமணம், தைத்தீரிய ஆரணியகம், பஞ்சவிம்ச பிராமணம் முதலிய வேதநூல்கள் கூறுதல் முன்னரே எடுத்துக் காட்டப்பட்டமையாலும் அங்ஙனம் பிறப்பு இறப்புக்களும் கிடந்துழன்ற அத்திருமால் முழுமுதற் கடவுளாதல் ஒருவாற் றானும் இயையா தென்க.

அதுவேயுமன்றி, நான்முகனுந் திருமாலுந் தாத்தாமே முதல்வரெனத் தம்முட்டாமே கருதிச் செருக்கி மலைந்தவழி அவர்க்கிடையே இறைவன் பெரியதோன் அனற்பிழம்பு வடிவாய்க் கிளர்ந்து தோன்றி அவர் தலைவரல்லாமை தேற்றின வரலாறு இலிங்கபுராணத்தின்கண் (இலிங்க புராணம் 1, 17) விரித்துரைக்கப்பட்டிருத்த லானும் அவ்விருவரும் முதல்வரா காமையும், எல்லாத் தொழிலும் ஒருங்கு வல்ல முழுமுதற்கடவுள் ஒன்று அவரின் வேறாய் உண்மையும், அம்முழுமுதற்கடவுள் சிவபிரானேயாந் தன்மையும் தெற்றென விளங்காநிற்கும். வ்வாற்றால், நான்முகன் திருமான் முதலான கடவுளரைப் படைத்துங் காத்தும் வருவான் இறைவனென்று ஈண்டு அடிகள் அருளிச் செய்தது சாலப் பொருத்தமுடைத்தா மென்க.

அற்றேல், எல்லாம் எல்ல இறைவனே படைத்தல் காத்தல் அழித்தல் முதலான எத்தொழிற்கும் உண்மையில் உரியனாக, நான்முகன் திருமான் முதலான பிறர் அவற்றுள் ஒரோ வொன்றைச் செய்வாராக நூல்கள் ஓதுதல் என்னை யெனின்; எல்லா வுயிர்களும் உடம்புகளிற் பொருந்தி அவற்றின்கண் அமைந்த அகக்கருவி புறக்கருவிகளின் வாயிலாகப் பலதிறப் பட்ட வினைகளைச் செய்தாலன்றி அவரைப் பற்றிய ஆணவ மலத்தின் வலி தேயாதாகலின், அதன் பொருட்டு மேலுள்ள தேவர் முதற் கீழுள்ள மக்கள் விலங்குகள் புழுக்கள் பூண்டுகள் ஈறான எல்லா வுயிர்களும் அவ்வாணவப்பற்று அறுங்காறும் வினைகளைச் செய்யுங் கடப்பாடு உடையனவாய்ப் போதரு கின்றன. நான்முகன் திருமான் முதலான கடவுளரும் மலக்கறை யுடையராகலான் அவர்க்கது நீங்கும்பொருட்டு, இறைவனே அவர்மேல் வைத்த அருட்பெருக்கால் அவர் தமக்கு ஒரோ வாரு தொழிலினை வகுத்துக் கொடுத்தா னென்க. இவ்வுண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/211&oldid=1589443" இலிருந்து மீள்விக்கப்பட்டது