உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

177

கலானும், படைத்தல் காத்தல் முதலாகிய எல்லாத் தொழிலும் ஒருங்குவல்ல ஒருமுழுமுதற் கடவுள் அவரின் வேறாய் வேண்டப்படு மென்க. அல்லதூஉம், எவற்றையும் படைக்கும் ஆற்றல்மிக்கோன் தான் ஒன்றாற் படைக்கப்பட்டுப் பிறத்தல் இலனாதல் வேண்டும். எவற்றையுங் காப்போன் தான் பிறத்தலும் பிறராற் காக்கப்படுதலும் இலனாதல் வேண்டும், மற்று, நான்முகனுந் திருமாலும் பிறந்து இருந்து இறந்தமை பண்டை நூல்களில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருத்தலின், அவர் தனித்தனி முதல்வராதலும் ஒருங்கு சேர்ந்து முதல்வராதலும் அல்லதவருள் ஒருவரே முதல்வராதலும் ஒருவாற்றானும் செல்லாது.

னி, நான்முகன் பிறப்பினைக் கூறும் பழைய வரலாற் றினை இங்கெடுத்துக் காட்டுவாம். “எல்லாவற்றிற்கும் மேலான என்றும் பிழித்திருக்கிற தெய்வத்தால் இன்னதென்றறியப்படாத ஒரு முறைமை பற்றி முக்குணங்களுங் கலக்கப்பட்டு இந்த மான் (மகத்) என்னுந் தத்துவம் உண்டாயிற்று. இராசத குணம் மேற்பட்டு ஒரு முறைமையால் உந்தப்பட்ட அந்த மானிலிருந்து பூதாதியகங்காரந் தோன்றி முக்குண வேறுபாட்டால் விசும்பினையும் மற்றவைகளையும் ஐந்து தொகுதிகளாகத் தோற்றுவித்தது. இவை தனித்தனியே படைக்க மாட்டாமை யால், முறைமையால் ஒருங்கு சேர்க்கப்பட்டு ஐம்பூதங்களால் ஆன ஒரு பொன் அண்டத்தை (முட்டையை)ப் பிறப்பித்தன. இவ் அண்ட கோசமானது கடற்றண்ணீரிலே உயிரின்றிக் கிடந்தது. அதில் ஈசன் ஓராயிரம் ஆண்டு இருந்தான். அவனது காப்பூழிலிருந்து ஆயிரம் ஞாயிறுபோல் ஒளிவிளக்கம் வாய்ந்ததாய், எல்லா உயிர்க்கும் உறைவிடமாயுள்ள ஒரு தாமரை மலர் தோன்றிற்று. அதன்கட் சுராட்டாகிய நான்முகக் கடவுள் பிறந்தனன். அவன் நீரின்கண் அமர்ந்திருந்த வனால் நிறைந்து உந்தப்பட்டுப் பண்டு போல எல்லா உலகங்களையும் தனது ஒரு கூற்றிலிருந்து படைத்திட்டான் என்று பாகவத புராணம் கூறுகின்றது.(பாகவத புராணம் 3,30, 12) இது கொண்டு நான்முகன் இறைவனருளாற் படைக்கப்பட்டு முன்னொரு காலத்திற் பிறந்தமை நன்கு தெளியப்படும்.

றை

ன்”

இனித் திருமால் சுக்கிரனாலும் பிருகுவினாலும் சபிக்கப் பட்டுப் பத்துமுறை நிலவுலகத்திற் பிறந்தாரென மற்ச புராணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/210&oldid=1589442" இலிருந்து மீள்விக்கப்பட்டது