உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் – 25

-

திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் பொலிவு பொருந்தும் ஆறுவகைப்பட்ட சமயத்தைக் கைப் பற்றும் அறுவகையோர்க்கும். வீடு பேறு ஆய் நின்ற விண் ணோர் பகுதி பகுப்புகள் எல்லாம். கீடம்புரையும் கிழவோன் - தன்னை நோக்கப் புழுவை யொப்பாராகத் தானே வீடுபேற்றிற்கு உரியனாய் நின்றோன், நாள்தொறும் அருக்கனிற் சோதி அமைத் தோன் ஒவ்வொரு நாளும் எழும் பகலவனில் ஒளியினை அமைத்தவன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் - பொலிவு பொருந்திய செய்தோன் மிக்க வலியினையுடைய ய நெருப்பின்கண் வெப்பத்தைச் செய்தவன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் - பொய் இல்லாத வானத்தின்கட் கலப் பினை வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோன் - மேன்மைபொருந்து காற்றின்கட் கிளர்ச்சியினைச் செய்து வைத்தோன், நிழற் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் ஒளிவிளங்கும் நீரில் இனிய சுவையினை நிகழச் செய்தோன், வெளிப்படமண்ணில் திண்மை வைத்தோன் - புலனாக மண்ணி னிடத்துத் திட்பத்தினை வைத்தவன் என்று என்று எனைப் பலகோடி எனைப் பல பிறவும் - எவ்வெக் காலத்தும் எத்துணைப் பலகோடியாகிய பொருள்களையும் எத்துணைப் பலவாகிய உயிர்களையும் அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் -அவ்வளவு அவ்வளவாக அவ்விடங்களிற் சேர்த்தோன், அஃது ஆன்றுஅஃதன்றியும் என்றவாறு.

L

உலகங்களைப் படைக்கும் ஆற்றல் உடைய நான்முகக் கடவுளையும் படைக்கப்பட்ட உலகங்களைக் காக்கும் ஆற்றல் உடைய திருமாலையும் இறைவன் படைத்துக் காப்பன் என்று கூறியதென்னை? மாப்பேருலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் படைக்கவுங் காக்கவும் வல்லரான அவரினும் மேற்பட்ட பிறிதொருகடவுள் உண்டென்றல் மிகையாமா லெனின்; அற்றன்று; படைத்தற் றொழில் ஒன்றற்கே உரியவர் அதனின் வேறாகிய காத்தற்றொழிலைச் செய்யமாட்டாமை யானும், காத்தற் றொழில் ஒன்றற்கே உரியவர் அதனிற் பிறி தாகிய படைத்தற் றொழிரைச் செய்யமாட்டாமையானும், அவ்விருவருமே முதல்வர் எனக் கொள்ளின் அவர் தம் முட்டாமே பெரியரெனக் கருதி மாறுபட்டவழி நடு நின்று அவர் தம் வழக்குத் தீர்த்து அவர்க்கு அறிவு கொளுத்துதற்கு அவரிற் பெரியனாகிய ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/209&oldid=1589441" இலிருந்து மீள்விக்கப்பட்டது