உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

66

175

பெயர்க்கும் என்பதன் தன்வினை முதனிலை திரிதற் பொருட்டாதல் ஊழி பெயரினும்” என்புழிக் காண்க (திருக்குறள் 989)

-

குழகன் இளையோன்; "மழவுங் குழவும் இளமைப் பொருள்” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். எல்லாப் பொருளும் இளமையும் அது கழிந்து மூப்பும் உடையனவாய் வேறுபாடுறா நிற்க, அவற்றை அவ்வாறு திரிபுபடுத்தும் முதல்வன் தான் அங்ஙனந் திரிபெய்தாது என்றும் ஒரு பெற்றியனாய் நிற்றலின் இளையோன் என்றார்.

15

20

25

படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுள், காப்பவை

கரப்போன் கரப்பசை கருதாக்

கருத்துடைக் கடவுள், திருத்தகும்

அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன், நாடொறும் அருக்கனிற் சோதி அமைத்தோன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன், திண்டிறற் றீயின் வெம்மை செய்தோன், பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கங் கண்டோன், நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன், என்றென் றெனைப்பல கோடி எனைப்பல பிறவும்

அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன், அஃதான்று

முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் - எல்லா வற்றையும் உண்டாக்கும் நான்முகனையும் படைக்கும் பழை யவன், படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் - உண்டாக்கப் பட்டவைகளைக் காக்கும் மாயோனையும் காக்குங் கடவுள் காப்பவை கரப்போன் - காக்கப்பட்டவைகளைத் தத்தம் துற் பொருள்களில் ஒடுக்கி மறைப்பவன், கரப்பவை கருதாக் கருத்து உடைக் கடவுள் - அங்ஙனம் மறைக்கப்பட்டவற்றைச் சில காலங் கருதாதிருந்து பின்னர்க் கருதுங் கருத்து உடைய கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/208&oldid=1589440" இலிருந்து மீள்விக்கப்பட்டது