உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

❖ 25❖ மறைமலையம் – 25

எடுத்துக் கூறினார்; சூறைக்காற்று எல்லாவற்றையுஞ் சுழற்றும் முதல்வன் செயலுக்கும், அதன்கட்பட்ட சிறுகாற்று இறைவன் செயலிற்பட்டு நடைபெறும் ஏனை எல்லாவற்றிற்கும் உவமை களாக இயைத்துக் கொள்க. உவமையும் பொருளும் இங்ஙனம் இயையுமாறு வைத்துரைக்க அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப.

எறி - வீச்சு; அது பெயர்ப் பொருளையே அசைத்து நின்ற தொரு சொல். (இலக்கணக் கொத்துரை வேற்றுமையியல் 25)

'வளி' சிறுகாற்று எனப் பொருள்படுதலை "முயக்கிடைத் தண்வளி போழ" என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க.* (திருக்குறள் 1239)

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளி’ என்பதிற் சூக்கம் என்றது சூறை மாருதத்திற்கும், தூலம் என்றது வளிக்கும் உரிய இயல்புகளை நிரலே குறித்து நின்றன. பருப் பொருளை இயக்குவது நுண்பொருளே யாதல் நீர் தன்னினும் பரிய பொருள்களை இயக்குதற்கண்ணும், நீராவி, காற்று, மின் முதலிய நுண்பொருள்கள் பெரும் பெரும் பொறிகளை இயக்குதற் கண்ணும் வைத்து நன்கு அறியக் கிடத்தலின், நம்ம னோர் மெய்க்கட்படும் சிறுவளியினை இயக்குவதூஉம் அதனினும் நுண்ணிய சூறைக்காற்றே யாதல் பெறப்படும். பெறவே, இறைவன் மிக நுண்ணியனாம் என்பதூம், அவன்றன் நுண்மையை நோக்க ஏனை உயிருள்ளனவும் உயிரில்லனவும் ஆய எல்லாம் பருப் பொருளேயா மென்பதூஉம், அத்துணை நுண்ணியனாதல் பற்றியே எல்லாம் அவன்றன் ஆற்றலாற் சுழற்றப்படுவவாயின வென்பதூஉம் தாமே பெறப்படும்.

'சூக்கம்' என்பது சூக்ஷும என்னும் வடசொற் சிதைவு.

தூலம்' என்பது ஸ்தூல என்னும் வடசொற் சிதைவு ஈண்டு இரண்டாம் வேற்றுமைஉருபு தொக அத்துச் சாரியை நின்றது; இவ்வாரு வருதல் “கொண்பெருங் கானத்துக் கிழவன்” என்புழியுங் காண்க. (புறநானூறு 155)

‘எறியது வளி' என்புழி அன்சாரியையும்கண் உருபுந்

தொக்கன.

கொட்கல்

-

கழலல்; “அந்தரக் கொட்பினர் வந்துடன்

காண” என்றார் திருமுருகாற்றுப்படையினும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/207&oldid=1589439" இலிருந்து மீள்விக்கப்பட்டது