உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

173

அழிப்பினைச் செய்யும் இறுதிக்காலத்தில் படைப்புங் காப்புந் தனிநிற்கமாட்டாவாய் அழிந்து ஒடுங்குதலின் ‘ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழி' என்றருளிச் செய்தார்.

சிவஞானசித்தியாரிலும்,

"இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியில் நின்றா ரென்னில் இறுதிதான் உண்டா காதாம் அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும் பெறுதும்நாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே'

என்று இவ்வுண்மை தெளிவுறுத்தப்பட்டமை காண்க.

ஈண்டு ‘மாப்பேர் ஊழி' என்றது மா சங்கார காலத்தை

னி,. இம் மாப்பேர் ஊழிக்கட் படைப்புக் காப்பினையும் அவற்றைச் செய்யுங் கடவுளரையும் ஒடுக்கியருளின மா சங்கார ருத்திரனாகிய எல்லாம் வல்ல முதல்வன் மீண்டும் அவற்றைத் தோற்றுவிக்குங்கால் தன்கண்நின்றே தோற்றுவிப்பனாகலின் ‘நீக்கமும் நிலையும்' என்பவற்றை 'மாப்பேர் ஊழி' யின்பின் வைத்தோதினார். இவ்வாறு அண்டங்களும் அவ்வண்டத் தலைவர்களும் மாப்பேரூழியில் ஒடுங்கி மீளத் தோன்றுதலையே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும்,

66

'அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையிற் றோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்னுஞ் சூத்திரத்தும்,*(சிவஞானபோதம் 1) “ஒடுங்கின சங்காரத்தின் வழியல்லது உற்பத்தியில்லை” என்னும் வார்த்திகப் பொழிப்பினும் இனிது விளக்கி யருளினமை காண்.

'மாப் பேர்' ஒரு பொருள் இரு சொல்.

‘நீக்கம்' என்பது ஈண்டு அவ்வூழிநீங்கி அவை மீளத் தோன்றுதலின் மேற்று.

இங்ஙனமாக ஒடுக்கமுந் தோற்றமும் மாறிமாறிச் சுழன்று வருதலை ஓர் உவமையின் வைத்துக் காட்டுவார் சூறைக்காற்றின் கண் அகப்பட்டுச் சுற்றும் சிறுகாற்றினை எடுத்துக் கூறினார்; சூறைக்காற்று எல்லாவற்றையுஞ் சுழற்றும் சிறுகாற்றினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/206&oldid=1589438" இலிருந்து மீள்விக்கப்பட்டது