உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

  • மறைமலையம் 25

திருமால் அதனை அடைந்தனர். அவர் கடவுளரிற் சிறந்தோர் ஆயினர்: அதனால் மாந்தர்கள் ‘மாயயோன் தேவர்களில் மிகச் சிறந்தோன்' என்கின்றனர்.

எவன் இந்த மாயோனாகின்றான் அவன் வேள்வி யாகின்றான். எவன் இந்த வேள்வியாகின்றான் அவன் ஆதித்தியன் ஆகின்றான். மாயோன் இந்தப் புகழால் அடங் காமற் செருக்குற்றனன். இங்ஙனமே இப்போது ஒவ்வொருவரும் புகழால் அடங்காமற் செருக்குறுகின்றனர். அவன் தன் வில்லையும்

மூன்று கண்களையும் எடுத்துக்கொண்டு போயினான். நாண் ஏற்றிய தனது வில்லின் முனைமேல் அவன் தனது தலையைச் சார்த்திக்கொண்டு நின்றனன். அவனை மேற்கொள்ள முடியாமையின் கடவுளர் அவனைச் சூழ்ந்து கொண்டு கீழே அமர்ந்திருந்தனர். அப்போது எறும்புகள் அவர் களை நோக்கி ‘அவ்வில்லின் நாணை அறுப்பவனுக்கு நீங்கள் யாது கொடுப்பீர்கள்?' என்று சொல்லின. அவன் நுகர்தற்கு உணவு கொடுப்போம்; பாலைநிலத்திலுங்கூட அவன் தண்ணீர் பறுவான்; மேரும் நுகர்தற்கு எல்லா உணவுப் பொருளும் தருவோம் என்றார்கள். அவை அணுகி அவனது வில்லின் நாணைக் கடித்தன. அஃது அறுந்ததும் வில்லின் முனைகள் நிமிர்ந்து மாயோன் தலையை அறுத்து விட்டன. அஃது ஓசையிட்டுக்கொண்டு விழுந்தது.”* (சதபத பிராமணம் 4 111) இங்ஙனமே இது கிருஷ்ண எசுர்வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய ஆரணியகத்திலும்,* (தைத்திரீய ஆரணியம் 5117) சாமவேதத்தைச் சேர்ந்த பஞ்சவிம்ச பிராமணத்தினும்* (பஞ்சவிம்ச பிராமணம் 7,5,6) சொல்லப்பட்டிருத்தல் காண்க.

Q, ‘மிகுதி' எண்ணின் மிகுதியைக் காட்டுவதெனப் பொருள்கொண்டு, வேதியன் தொகை என்றாற்போல மாலவன் தொகை எனப் பொருளுரைத்தலும் ஒன்று.

'தோற்றமும் சிறப்பும்' என்பவற்றில் சிறப்பு என்பது ஈண்டுக் காத்தற்றொழிலால் உண்டாகும் நிலைபேற்றினை உணர்த்து கின்றது; சிறப்பினைத் தரும் நிலைபேற்றினைச் சிறப்பென்றது ஆகுபெயரான்; “சிறப்புக் குடிமை செல்வம் கல்விகளினாய மிகுதி”* (திருக்குறள் 977) என்பர் பரிமேலழகியார். தோற்றம் 'வேதியன் றொகைக்கும்', சிறப்பு 'மாலவன் மிகுதிக்' கும் நிரல் நிரையே வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/205&oldid=1589437" இலிருந்து மீள்விக்கப்பட்டது