உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

171

மேலே, முதல் ஆறடிகளானும் பருப்பொருள்களாய் ஒன்றி னொன்று பெரியவாய அண்டங்களும் தன்னை நோக்கச் சிற்றணுக்களாம்படி தான் வரம்பின்றிப் பெரியனாய் நிற்கும் இறைவனது தூலநிலைகூறி, ஈண்டிவ் வாறடிகளானும் அவ்வவ் வண்டங்கட்குத் தலைவராய்த் தன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் நான்முகன் திருமான் முதலான கடவுளரையும் அவர் செய்யுந் தொழில்களையும் தன் றொழிற்கட்படுத்துச் சுழற்றுஞ் சூக்கும நிலை கூறினார். அண்டங்கள் தூலப் பொருள்களாதலும், அவ்வண்டத் தலைவராங் கடவுளர் சூக்கும உயிர்களாதலும் தேற்றமாகலின், அவ்விருவகைப் பொருள்களோடு இயைந்து நிற்கும் இறைவனது நிலையும் அவ்வாற்றான் இருவகைப்படுத் தோதப்பட்டதென்க.

இனி, அண்டங்கள் எத்துணைய அவ்வண்டத் தலைவரும் அத்துணையராம் என்பது தெரிப்பார் அவ்விரு நிலைகளையும் முன்னும் பின்னும் அவ்ஆறு அடிகளாற் கூறினார் என்க.

அண்டங்கள் பலவற்றினும் படைத்தற்றொழிலைப் புரியும் நான்முகக்கடவுளர் பலராகலின் ‘வேதியன் தொகை' என்றார். இதுபற்றியே திருநாவுக்கரசுநாயனாரும்

“நூறு கோடி பிரமர்கள் நுங்கினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்இல் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே”

என்று அருளிச் செய்தனர்.

‘மாலவன் மிகுதியும்” என்பதில் மிகுதி என்னுஞ் சொல் செருக்கு என்னும் பொருட்டாயிற்று; “மிகுதியான் மிக்கவை செய்தாரை” என்புழியும்* (திருக்குறள் 158) இப்பொருட்டாதல் காண்க. திருமால் செருக்குற்றுத் தலையிழந்தமை எசுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்திற் சொல்லப்பட்டிருக் கின்றது; அது வருமாறு: “கடவுளர் அதன்பிற் சொன்னார்கள்: 'நம்முள் எவர் உழைப்பு தவம் அன்பு வேள்வி படில என்னும் இவற்றால் வேள்வியின் பயனைக் காண்கின்றாரோ அவர் நமக்குள் மிகச் சிறந்தவர் ஆகுக. இது நமக்கெல்லாம் பொது’ (அதற்கெல்லாரும்) ‘அப்படியே ஆகுக' (என்றனர்). முதலில்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/204&oldid=1589436" இலிருந்து மீள்விக்கப்பட்டது