உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • மறைமலையம் 25

-

‘புரைய’ என்னும் உவம உருபு மெய்யுவத்தின்கண் வந்தது;

என்னை?

66

கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய

ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பவென்

றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்

என்று (தொல்காப்பியம் உவமயியல் 15) ஆசிரியர் தொல் காப்பியனார் கூறினாராகலினென்பது.

10

வேதியன் றொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றாமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்

தெறியது வளியிற்

கொட்கப் பெயர்க்குங் குழகன்; முழுவதும்

-

-

-

-

தெரியின் ஆராய்ந்து பார்ப்பின், வேதியன் தொகை யொடு நான்முகக் கடவுளின் கூட்டத்தோடு, மாலவன் மிகுதியும் திருமாலின் செருக்கியநிலையும், தோற்றமும் படைப்பும், சிறப்பும் - நிலையும், ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் - அவை முடிவொடு கூடிய மிகப்பெரிய ஊழிகாலமும், நீக்கமும் - அதுநீங்குகையும், நிலையும் - நிலைபேறும், சூக்க மொடு தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளியின் - நுண்மை யுடன் பருமையும் வாய்ந்த சுழல்காற்றினது வீச்சின்கட் பட்ட சிறுகாற்றுச் சுழலுமாறுபோல. கொட்க சுழல, பெயர்க்கும் திரிக்கும், குழகன் - இளையோன் என்றவாறு. 'முழுவதும்' என்பது பின்னே கூட்டப்படும்.

6

-

-

என்றது: பெருந்திரளினரான நான்முகக்கடவுளரும், அவர் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர் முறையே செய்யும் தொழில்களான தோற்றமும் நிலையும், அவை முடிந்த ஊழி காலமும், அவ்வூழிக்காலநீக்கமும், மீண்டும் அவரும் அவையுந் தோன்றி நிலைபெறுதலும் மாறிமாறிச் சுழலச் சுழற்றும் குழகன் என இறைவனது நுண்ணிய வரம்பிலாற்றல் கூறிய படியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/203&oldid=1589435" இலிருந்து மீள்விக்கப்பட்டது