உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்று

திருவாசக விரிவுரை

169

இனி, அண்டப் பிரகிருதி என்பது ‘அண்டப்பகுதி' என ஆயிற்றென்று உரைப்பாரு முளர். சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களும் ஒன்றினொன்று மிகாது ஒத்து வடிவுகாட்டாத நிலையே பிரகிருதியாமெனச் சாங்கியத்தும் சைவ சித்தாந்தத்தும் ஓதப்படுதலின் அதனினின்றுந் தோன்றி வடிவுடைத்தாகிய அண்டத்தைப் பிரகிருதியென வழங்கல் பொருந்தாதென்க.

‘பகுதி' பிரிவுப் பொருளைத் தருதல் "பகுதியாற் பாற்பட்டொழுகப் பெறின்"* (திருக்குறள் 12,1) என்புழிக் காண்க.

‘உண்டை’ திரள்வடிவினை உணர்த்தல் திவாகரத்துட் காண்க; ‘உருள்' என்னும் முதனிலையிற்றோன்றிய 'உருண்டை’ என்னுஞ் சொல் இடைக்குறைந்து ‘உண்டை' என்றாயிற்று.

‘பிறக்கம்’ பிறங்கு என்னும் முதனிலையிற் பிறந்த பெயர்; து பெருமை என்னும் பொருட்டாதலைத் திவாகரத்துட் காண்க.

வானின்கட் சுழன்று செல்லும் உலகங்கள் ஒவ்வொன்றன் அளவும் நம்மனோராற் குறித்துணர லாகாமையின் ‘அளப்பருந் தன்மை' என்றார். இதனை உம்மைத் தொகையாக வைத்துரை யாமல் ‘காட்சி’க்கு அடையாக ஏற்றுவாரும் உளர்.

அண்டகோளகைகளின் தோற்றங்களை ஆராயப் புகுவார்க்கு, அவை ஆராயுந்தொறும் ஆராயுந்தொறும் குறையா வளப்பாடு உடையனவாய் விரிதலின், 'வளப்பெருங் காட்சி’ என்றார்.

அணு-நுண்துகள்; பிங்கலந்தையுள் நுண்மை என்பர்.

அளவு குறித்தறியப்படாத அண்டங்களெல்லாம் இறைவனருள்வெளியில் மிகச் சிறிய அணுக்களை யொப்ப

ஊட

சைய, அவன் அவற்றை யெல்லாம் தன் அகப்படுத்துப் பின்னும் பரந்து செல்லும் பெரும் பரப்பினனாதலை நம்ம னோர்க்கு நன்கு புலப்படுத்துவார். வீட்டின் கூரைமுகட்டுச் சிற்றிடுக்கின்வழியே அதன் அகத்துப் புகும் ஞாயிற்றின் கதிரில் விரைந்தாடும் துகள்களை ஈண்டு உவமையாக எடுத்தோதிய வனப்பு சாலவும் வியக்கற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/202&oldid=1589434" இலிருந்து மீள்விக்கப்பட்டது