உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

❖ - 25❖ மறைமலையம் – 25

இருத்தல் தெரித்தற் பொருட்டே அடிகள் ‘உண்டைப் பிறக்கம்’ என்று பின்னருங் கூறினார். இந்நிலவுலகும், இந் நிலத்தின்மேல் வானிற் காணப்படும் ஏனை யுலகங்களும் உருண்ட வடிவின வாயிருத்தலை மேல்புல வானூலார் கண்டவாறே பண்டை நாளிலிருந்த நம் அடிகளுங் கண்டறிந்தமை குறிக்கொளற்பாற்று. அண்டங்கள் அங்ஙனம் உருண்டை வடிவினவாயிருத்தல் என்னை யெனின்; புலப்படாது நுண்ணிய வடிவிலிருந்த மாயையை இறைவனருளாற்றல் கலக்கிக் கடைதலின் ஆண்டெழுந்த சொல்லுக்கடங்கா விரைந்த சுழன்ற இயக்கத்தால் அது புலப்பட்ட வடிவு பெறுகின்றுழிப் பல பெரும் பகுதிகளாகப் பிரிந்து, அங்ஙனம் பிரியுங்கால் அனற்றிரளையாய் நெகிழ்ந் திருந்த அவை ஆறி யிறுகியபடியாய் அவ்வியக்கத்தின் கட்பட்டு மிகுவிரைவோடு சுழலுதலின், அச்சுழற்சிக்கு ஏற்பப் பந்துபோல் உருண்டைவடிவு பெறலாயின வென்க.

66

அண்டங்கள் இவ்வாறு முதற் பொருளாகிய மாயையிற் பிரிந்த பிரிவுகளாதல்பற்றியே அப்பொருள்படும் ‘பகுதி' எனுஞ் சொல்லை ஈண்டெடுத்து வழங்கினார். நுண்ணிய வடிவிற் புலப்படாதிருந்த மாயையைக் கலக்கி அதன்கணிருந்து இவ்வுலகங்களை இறைவன் தோற்று வித்த படைப்பு முறையை, ‘அவன் நீருனுட் புகுந்தான்; அங்கி ருந்து ஒரு முட்டை எழுந்தது; அவன் அதனைக் கையாடினான். ‘அஃது உண்டாகுக,' ‘அது வளர்ந்து வருக' என்று அவன் கூறினான்.” “அப: ப்ராவிசத்தத: அண்டம் ஸமவர்த்தத தத் அப்யம்ருசத் ‘அஸ்த்வ' இதி ‘அஸ்து பூயோஸ்த்வ’ தி ஏவதத் அப்ரவீத்” என்று சதபத பிராமணமும்* (சதபதபிராமணம் 6, 11, 10) கூறுதல் காண்க. இங்ஙனமே சாந்தோக்கியோப நிடதமும் (சாந்தோக்கியம் 3,19) ஆதித்யோ ப்ரஹ்ம இதி ஆதேச: தஸ்யோபவ் யாக்யாநம் அஸத் ஏவ இதம் அக்ரே ஆஸித் தத்ஸத் ஆஸீத் தத்ஸமபவத் தத் ஆண்டம் நிரவர்த்தத” “கதிரவன் பிரமத்திற்கு அணுக்கமான

66

மாய்ச் சொல்லப் படுகின்றான். இது முதலில் அசத்தாகவே (புலப்படாததாகவே) இருந்தது. அதிலிருந்து இந்தச் சத்து (புலப்பட்ட வடிவுடைய உலகு) வந்தது. அது வளர்ந்து ஓர் அண்டம் (முட்டை அதாவது உலகம்) ஆயிற்று." (சாந்தோக் கியம்3,19) என்று கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/201&oldid=1589433" இலிருந்து மீள்விக்கப்பட்டது