உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

6

167

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் ஒன்றற்கொன்று மேற்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து, நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன - நூற்று ஒரு கோடியினும் மிகுதிப் படப் பரந்தனவாகிய, அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - அண்டப் பிரிவுகளின் திரண்ட வடிவின் பெருக்கமும், அளப்பு அருந் தன்மை வளப் பெருங் காட்சி - அளத்தற்கு அரிய தன்மையும் வளப்பாடு உடைய பெரிய தோற்றமும், இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய - மனையினுட் புகும் ஞாயிற்றின் கதிரிற் பொருந்திய அணுக்களை ஒப்ப, சிறிய ஆகப் பெரியோன் சிறியனவாய்த் தோன்றுமாறு பேரளவினை யுடையோன் என்றவாறு. 'தெரியின்' என்பது பின்னே கூட்டப்படும்.

-

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன' என்னும் இரண்டடிகளின் ஈற்றில் ஆகிய என்னும் ஒரு சொல் விரித்து அண்டப் பகுதி' என்பதனோடு கூட்டுக; விரிந்தனவாகிய அண்டப்பகுதி என்க.

வான்

நள்ளிருட்பொழுதில் வானின்கண் முத்துக்கள் சிதர்ந்தாற் போற் காணப்படும் ஒவ்வொரு வான்மீனும் ஒவ்வோர் உலகாம். அவையெல்லாம் ஒன்றினொன்று பெரியனவாய் வெளியிற் சுழன்று செல்கின்றன. இவ்வுலகங்கள் இத்துணைய வென்றும் ஒன்றினொன்று இத்துணைப் பெரியன வென்றுங் கணக்கிட்டுக் காட்டல் நம்மனோரால் ஆகாமையின் அவை தம்மை ‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன' என்றார்; 'நூற்றொரு கோடி' என்பது ஈண்டு அளவின்மை குறித்து நின்றது; 'தொக்கோர் கோடி’ என்புழிப் போல* (சீவகசிந்தாமணி 3,153) இச் சொற் றொடர்க்கு நூறு கோடி யெனவாதல் நூற்றொரு கோடியென வாதல் பொருளுரைக்க கோடி - நூறு நூறாயிரம்.

கில்லை'

'நின்ற எழில்' - பெயரெச்சத்து ஈற்றகரம் தொக்கது; 'புகழ்புரிந் தில்லிலோர்க் என்புழிப்போல. (திருக்குறள் 59)

‘அண்டம்' என்பது முட்டையெனப் பொருள் படுவ தாரு வடசொல். உலகங்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவினவா யிருத்தலின் அண்டம் எனப் பெயர் பெற்றன. அண்டங்கள் இங்ஙனந் திரண்ட வடிவினவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/200&oldid=1589432" இலிருந்து மீள்விக்கப்பட்டது