உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மூன்றாவது அகவல்

திருவண்டப் பகுதி

(சிவனது தூல சூக்குமத்தை வியந்தது) தில்லையில் அருளிச் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல முதல்வன் பெரியதிற் பெரியனாயும் சிறியதிற் சிறியனாயும் நிற்கும் முறைமைகளை இத் திருவகவலில் அடிகள் அருளிச் செய்வான் புகுந்து, முதற்கட் பருப்பொருள் களுட் பெரிய ‘அண்டப் பகுதி' யினைக் கூறுகின்றாராகலின், இதன்கண் முதல் நின்ற அவ்விரு மொழிகளும் 'திரு' என்னும் அடையடுத்து இதற்குப் பெயராயின. இவ்வாறு ஒரு பாட்டின் முதல்நின்ற ஒரு சொற்றொடர் அப்பாட்டிற்காதல், ஒரு நூல் முதற்செய்யுட்கண் நின்ற ஒரு சொற்றொடர் அந் நூற்காதல் பெயராய் வருவது ‘முதற் குறிப்பு' என்ப. இஃது ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய

“தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே”

என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும்.* பெயரியல் 3) ‘ஆத்திச்சூடி' என்பதும் அது. தூலம் - பருமை; சூக்குமம் - நுண்மை.

5

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன்; தெரியின்

(தொல்காப்பியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/199&oldid=1589431" இலிருந்து மீள்விக்கப்பட்டது