உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

165

னானதுமெல்லாம் அவன் அடியார்மேல் வைத்த பேரருளினா லேயாம் என்பது புலப்படுத்துதற் பொருட்டேயாமென்க.

இனிச் சகலரையேயன்றி விஞ்ஞானகலர் பிரளயாகலர் முதலிய மேலோரையும் அவரவர்க்கிசைந்த பரிசால் ஆட் கொள்வானென்பது தெரித்தல் வேண்டியும், மேற்கிளந்தோதிய பலதிற அருள் விளையாட்டுகளெல்லாம் அவரவர்க்கியைந்த படியாமென்பது காட்டல் வேண்டியும் எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும், அப்பரிசதனா லாண்டுகொண்டருளி என்பதனை ஈண்டருளிச் செய்தார்.

இனி, இத்துணையுங் கூறியபின் இறைவன் கடை முறையாகக் தம்மைவிட்டு மறைந்தக்கால் தம்மைத் ‘தில்லையம் பலத்தேவருக' வெனக் கூறினமையும், அப்போ தவனோடு உடன் சென்ற அடியவர்கள்பால் அவன் இரண்டறக் கலந்தருளின மையும், அவனை அங்ஙனம் எய்தப் பெறாதார் ஏங்கி வருந்தின மையும், சத்திசிவ தத்துவங்கட்கும் அப்பாற்பட்ட அருள்நிலைய மாகிய கைவலையிலே வீற்றிருந்தருளும் அப்பெருமான் அடியார்க்கு நேர் நின்று அருளுதற் பொருட்டுப் புலியூர் பொதுவினிற் புகுந்திருந்தருளினமையுங் கூறிமுடித்தாரென்பது.

இத்திருவகவலில் எல்லாவடியும் நாற்சீரான் வந்தமையின், இது நிலைமண்டில ஆசிரியப்பா; “எல்லா அடியும் ஒத்து, நடை பறுமாயின் நிலைமண்டிலம்” என்றார் யாப்பருங்கலக் காரிகையிலும். (யாப்பருங்கலக் காரிகை செய்யுளியல் 1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/198&oldid=1589430" இலிருந்து மீள்விக்கப்பட்டது