உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

❖ 25❖ மறைமலையம் – 25

மும்மலம் அறுக்கவல்லது இறைவனேந்திய கழுக்கடை யேயன்றி அவன் றிருமேனியின் ஒளியும் அது வல்லுமென்பார் 'மூலமாகிய மும்மலமறுக்கும்' என்னும் அடையைச் சோதிக்கும் விதந்தெடுத்தேற்றினார். இனி ஆண்டு ஒன்பதாவதாகக் கூறிய மாலையினை ஈண்டு ஐந்தாவதாகக் கூறியவாறென்னை யெனின், எல்லாம் வல்ல முதல்வன் ஓர் ஒப்பற்ற காதலனாகித் தமக்குப் பேரின்பத்தையும் மெய்யறிவையும் வழங்கல்வேண்டி வந்த குறிப்புணர்த்தச் செந்நிறமும் நறுமணமும் ஒருங்களாவிய செங்கழுநீர் மாலையினை யணிந்து போந்தமையின் இதனை அதன் பின் வைத்துரைத்தார். இனி ஆண்டு ஆறாவதாகக் கூறிய ஊர்தியினை ஈண்டும் ஆறாவதாகவே கூறினாரேனும் ஆண்ட தனை மலையின் பின்னும் ஈண்டு மாலையின் பின்னும் வைத்துரைத்தார். மாலையணிந்து மகிழ்ச்சி மீக்கூரப்போந்து தம்மையடிமைகொண்ட பெருமான் பின்னுந் தம்பொருட்டா கவே மதுரைமா நகரிற் குதிரை யூர்ந்து வந்தமையின் அவ்வியைபு பற்றி இதனை மாலையின்பின் வைத்துப் புகன்றருளினாரென்க.

இனி ஆண்டு நாட்டை இரண்டாவதாக வைத்துரைத் தமை போலாது, இறைவன் குதிரையூர்ந்து போந்த பாண்டி நாட்டை ஈண்டுக் கூறுவேண்டுகின்றமையின் ஊர்தியின் பின் நாடுவைத்தாரென்க. இனி, ஆண்டு மூன்றாவதாகக் கூறினா ரேனும் ஊரை நாட்டின் பின் வைத்தது போலவே ஈண்டும் அதனை அவ்வாறு வைத்துரைத்தலோடு, மதுரையை அகன்ற பின் தாம் பெற்ற தவம் தமக்குச் கைவருதற்கு ஏதுவாய் நின்ற ஊராதல்பற்றி உத்தரகோசமங்கை யூரை மேலதன்பின் நிறுத்தினா ரென்க. ரென்க. இனி, ஆண்டு முதல் எடுத்தோதிய தேவர்பிரான்’ எனும் பெயரை ஈண்டு மேலவற்றின்பின் ஒன்பதாவதாக நிறுத்தியது. இவ்வாறெல்லாம் தம்பொருட்டு எளிவந்து போந்தவன் தேவர்கள் பலருள்ளும் ஒருவனே போலுமென மலையாமைப் பொருட்டும். அவன் எல்லா வுலகங்கட்கும் எல்லா வுயிர்கட்கும் ஒரு தனித் தலைமைக் கடவுளேயாம் மெய்ம்மை அறிவுறுத்தற் பொருட்டுமே யாமென்க. இனி ஆண்டு ஐந்தாவதாகக் கூறிய அருண் மலையினை ஈண்டு இறுதிக்கட் பெய்துரைத்தது, இவ்வா றெல்லாம் ஒன்றுக்கும் பற்றாத ஏழையேன் பொருட்டு எல்லாம் வல்ல ஆண்டவன் குருவடிவிற் போந்ததும் குதிரைச் சேவக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/197&oldid=1589429" இலிருந்து மீள்விக்கப்பட்டது