உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி,

திருவாசக விரிவுரை

163

அருளிய பெருமை யருண்மலையாகவும்'

என்பதனால் மலை கூறினார்.

வ்வாறு தசாங்கம் எனப்படும் பத்துறுப்புங் கூறப் பட்ட மை காண்க. இனி ஈண்டுக் கூறப்பட்ட அப்பத்துறுப்புக் களின் முறையும், 'திருத்தசாங்கப்' பதிகத்திற் கூறப்பட்ட பத்துறுப்புக்களின் முறையும் ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றல் என்னையெனின்; ‘திருத்தசாங்கப் பதிகத்தில் அப்பத்து றுப்புக்களுங் கூறப்பட வேண்டிய முறையே பொருவாகக் கூறினார்; ஈண்டு இறைவன் ஆசிரியன் வடிவிற் போந்துதம்மை அடிமை கொண்டருளிய ஞான்று தமக்குச் சிறப்பாகத் தோன்றிய அடையாளங்களை முன்வைத்து அம்முறையை மாற்றி விதந்து கூறினார் என்க. திருத்தசாங்கப்பதிகத்தின் ஈற்றிற்கூறிய கொடியை ஈண்டு முதற்கட் கூறினார். ஆண்டு இறைவற்கு ஆடையாளமாக வழக்கமாய்க் கூறப்படும் ஏற்றுக் கொடியைக் கூறினார்; ஈண்டு ஐயனது அழகிய திருமேனியில் தம் கண்மையுங் கருத்தையுங் கவரு நீரதாய் விளங்கித் தோன்றிய 'திருநீற்றுக்கோடி'யைக் கூறினார்.

ஆண்டு நாலாவதாகக் கூறிய ‘ஆனந்த ஆற்றை’ ஈண்டு இரண்டாவதாகக் கூறினார்; இறைவனது பேரின்பப் பேற்றிலேயே தங்கருத்து ஈடுபட்டு நிற்றலானும், அவ்வின்பம் அவன் திருவுருவின் மேலுள்ள திருநீற்று வரைகளைக் கண்டவளவானே எழுதலானும் என்பது. இனி, ஆண்டு எட்டாவதாகக் கூறிய ‘நாதப்பறை'யினை ஈண்டு மூன்றாவதாகக் கூறியது, சுத்த வைந்தவத்தின்கட் டோன்றும் நாதவொலி அப்பேரின்பத்தைப் பயக்குங் கருவியாம் ஒற்றுமை பற்றியென்க; இவ்வியைபு "வேரின்பத்தோங்கும், பருமிக்க நாதப்பறை” என்று அடிகள் ஆண்டோதுமாறு கொண்டு தெளியப்படும். இனி, ஆண்டு ஏழாவதாகக் கூறிய முத்தலை வேற்படையினை ஈண்டு நாதப் பறையின் பின்வைத்து வத்து நா நான்காவதாகக் கூறிய தென்னையெனின், பேரின்பவினைவோடு உடன் நிகழற்பால தாகிய மும்மல நீக்கத்திற்குக் கருவியாம் இயைபு உணர்த்துவான் வேண்டி முத்தலைவேலினை மேலதனோடு அடுக்கக் கூறினார்; இது மும்மலங்களைப்பாறும் என்பதற்கு அடிகளே ‘மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள்படை” என்று ஆண்டுக் கூறியவாற்றான் அறியப் படும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/196&oldid=1589428" இலிருந்து மீள்விக்கப்பட்டது