உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 25

வைத்துப் ‘பயின்ற வண்ணமும்' என வினையும் உம்மையும் விரித்தும், என்றும் ஊர்தியாம் இன்பம் கட்புலனாகாது மறைந்து நிற்குங் குறிப்புத் தோன்ற ஆண்டு நிற்றற்குரிய ‘ஆகவும்’ என்னும் வினையும் உம்மையுந் தொகுத்தும் அடிகள் அருளிச் செய்த நுட்பம் பெரிதும் போற்றற் பாலது. பயில்வார்க்கு உணர்வு பெருகல்வேண்டி இங்ஙனம் உய்த்துணர வைத்தாராகலின் இது ‘மயங்கக்கூறல்' என்னுங் குற்றமாதல் யாண்டைய தென்க.

அற்றேல்,தசாங்க உறுப்புப் பத்தென்பது போய்க் கூடவொன்று சேர்ந்து பதினொன்றாமாலெனின்; ஆகாது; ன்பம் ஒன்றனையே ஊர்தியாக் கூறுமவர் அதன் இருவகை நிலைபற்றி இரண்டி டத்துக் கூறினாரல்லது, ஊர்தியின் வேறாவதொன்று கூறிற்றின்மையின் அஃது அப்பத்துறுப்புக் களின் மேற்படுதல் இல்லையென்க. அஃதொக்குமன்னாயினும், இவ்வாறெல்லாம் உரைக்க வேண்டாது ‘இன்ப ஊர்தி என்னுஞ் சொற்றொடரை ‘இன்பத்தை ஊர்தியாகவுடையவன்' என இறைவற்குப் பெயராக வைத்துரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; ‘எங்கோன்’ ‘தயாபரன்' ‘எம்மிறை' 'வெற்பன்'

அண்ணல்’ கருணையன்’ அருள்பவன்' 'உய்ப்பவன் 'இறைவன்' 'கிழவோன்' என முன்னும் பின்னுமெல்லாம் உயர்திணை வாய்பாட்டான் ஓதி இடையே இதனைமட்டும் ‘இன்பஊர்தி' என வைத்து ‘அஃறிணை வாய்பாட்டான் ஓதினா ரென்றல் பொருந்தாமையானும்’ ‘தூயமேனிச் சுடர்விடு சோதி’ என்னும் அடியிற்போந்த ‘சோதி’ என்னும் அஃறிணைச் சொல் அதனை அடுத்துநின்ற ‘காதலன்’ என்பதனோ டிணைந்து உயர்திணை யானாற்போல ‘இன்ப ஊர்தி' என்பதனையும் அவ்வாறு உயர்திணையாக்குஞ்சொல் ஏதும் அதனை அடுத்து நிற்பக் காணாமையானும், அதனைப் பெயராக வைத்துரைப் பின் மேற் குறித்த பொருணுட்பங்கள் பெறப்படாமையானும் அங்ஙனம் உரையுரைத்தல் அடிகட்குக் கருத்தன்றென வுணர்க.

இனிப், 'பாண்டிநாடே பழம்பதியாகவும்' என்பதனால் நாடு கூறினார்.

இனி, 'உத்தரகோசமங்கை யூராகவும்' என்பதனால் ஊர் கூறினார்.

இனி, 'தேவதேவன் திருப்பெயராகவும்' என்பதனாற் பேர் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/195&oldid=1589427" இலிருந்து மீள்விக்கப்பட்டது