உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

161

பின்னும் ஓர் ஊர்தி கூறுத லென்னையெனின் 'காட்டியும்' ‘அருளியும்' ‘கறங்கவும்” என்னும் முடிபுகள் போல ‘ஊர்தி யாகவும்’ என நில்லாமல் ஆண்டு எச்சமும் உம்மையும் தொக்கு நிற்க வைத்தமையின், அது பத்துறுப்புக்களுக்குரிய வினைகளுள் ஒன்று அன்மை பெற்றாம்; பெறவே, அது வாளா இறைவற்கும் இன்பத்திற்கும் உள்ள இயைபு உணர்த்துதற் பொருட்டாக வந்ததன்றிப் பத்துறுப்புக்களில் ஒன்றாக வந்ததன் றென்பதூஉம் தானே போதரும் அங்ஙனமாயின், ஆண்டு அதனை ஊர்திஎனப் பத்துறுப்புக்களில் ஒன்றைக் குறிக்குஞ் சிறப்புப் பெயராற் கூறி, ஈண்டு இதனைப் 'பரிமாவின் மிசைப்பயின்ற வண்ணமும்' என வாளா பொதுப்படக் கூறுதல் ‘மயங்கக்கூறல்’*(தொல்காப்பியம் மரபியல் 108) என்னுங் குற்றமாமா லெனின்; குற்றமாகாது; இறைவற்கு என்றும் ஊர்தியாவதூஉம், ஒரோ வொருகால் ஊர்தி யாவதூஉமென அதுதான் இருவகைத்தாம். அவற்றுள் அவற்கு என்றும் ஊர்தியாவது இன்பம்; ஒரோ வொருகால் அடியார்பொருட்டு ஊர்தியாவது பரிமா. இறைவற்கு என்றும் ஊர்தியாம் இன்பம் கட்புலனாற் காணப்படுதற்கும் பிறர்க்கு உணர்த்தப்படுதற்கும் ஆகாதநுண்மைத்தாம்; மற்று அவன் தன் அடியவர்பொருட்டு ஊர்ந்துவரும் பரிமாவோ கட் புலனாற் காண்டற்கும், அவன் அதன்மேல் இவர்ந்துவந்த பான்மை பிர்க்கெடுதது உரைத் தற்கும் எளிமையுடையவாம். இவ்வாறா கலின், ஐயன் பரிமாவின் மிசைப் புலப்பட்டுத் தோன்றிய தனையே ஈண்டு விதந்தெடுத்துக் கூறி, இங்ஙனங் கூறியது கொண்டு இறைவற்கு என்றும் ஊர்தி யாவது பரிமாவே போலுமென மாணாக்கன் மயங்காமைப் பொருட்டு அவற்கு என்றும் ஊர்தியாவது இன்பமேயாதலும் இனிது விளங்கல் வேண்டி அதனையும் ஈண்டு இடைப்படுத் தருளிச்செய்தார். இறைவனுக்கு என்றும் ஊர்தியாம் இன்பமே அடியவர் பொருட்டு ஒரு பரிமாவடிவிற் கட்புலனாய்த் தோன்றலாயிற் றென்று கடைப்பிடிக்க; இப்பெற்றி தெரித்தற் பொருட்டே அடிகள் பிறாண்டும் “எக் காலத்துள்ளும், அறிவு ஒண் கதிர்வாள் உறை கழித்து ஆனந்த மாக்கடவி” என்று அருளிச் செய்தமை காண்க.

இன்னும் அவ்வின்பம் பரிமா வடிவிற் கட்புலனாய் வந்த குறிப்புத்தோன்ற அதனைப் பத்துறுப்புக் களில் ஒன்றென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/194&oldid=1589426" இலிருந்து மீள்விக்கப்பட்டது