உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் 25

வளைவுப்பொருளை யுணர்த்தலின் வானின்கண் வளைந்து வளைந்தாடுங் கொடியையும் உணர்த்துதற் குரிமை யுடைத்தாம். இக் 'கோடி' என்னுஞ் சொற் குறுகியே 'கொடி' என்று வழங்குதலும் உணரற்பாற்று.

இனி, 'ஊனந் தன்னை யொருங்குட னறுக்கும், ஆனந் தம்மே யாறா வருளியும்' என்பதனால் யாறு கூறியவாறாம்.

இனி, 'நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்' என்பத னான் முரசு கூறியவாறாம்.

னிக் ‘கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்’ என்பதனால் முத்தலை வேலாகிய கைப்படை கூறியவாறாம்.

6

னிக், ‘காதலனாகிக் கழுநீர் மாலை ஏலுடைத்தாக எழில் பெற வணிந்தும்' என்பதனான் மாலை கூறியவாற்றாம். அடியவன் தன்னை ஒரு காதலியாகவும் ஆண்டானைக் காதலனாகவும் வைத்துரைத்தல் மரபாதலானும், நான்காவ தாகிய சன்மார்க்கம் அல்லது ஞானமார்க்கத்தின்கண் ஆண்டா னுக்கும் அடியவனுக்கும் உள்ள நெருங்கிய இயைபினுக்குக் காதலன் காதலி என்னும் இருவர்க்குமுள்ள நெருங்கிய உறவினையே எடுத்துக் காட்டல் தொல்லாசிரியர் வழக்காய்ப் போதரலானும், அடிகளைச் சன்மார்க்கத்திற் குரியராகவே சான்றோரெல்லாம் கூறுதலானும், இக் கருத்துப் பற்றியே அடிகளும் திருச்சிற்றம்பலக் கோவையார் அருளிச் செய்தமை யானும், ஈண்டுக் காதலனாகி' என்று அருளிச் செய்தது பொருத்தம் உடைத்தேயாம் என்க. மேலே தடாதகைப் பிராட்டியார் பொருட்டு வந்ததுபோலும்! என ஐயப்பாட்டின் வைத்து ஓதியதனினும், ஈண்டு அடிகள் பொருட்டு வந்ததெனக் கூறுதலை துணிபுடைத்தாம். அல்லதூஉம், இறைவன் திருவாதவூரடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுக்கு ஞான்று கழுநீர் மாலை அணியப்பெறற்றான் என்பது “வண்ணமென் கழுநீர்மாலை வளம்பெற அணிந்த பின்னர்” என்னுந் திருவாத வூரர் புராணத்* (திருப்பெருந்துறைச் சருக்கம் 50) திருமொழியாற் பெறப்படுதலானும் அது வலியுடைத்தாதல் காண்க.

இனி ‘அரியொடு பிரமற் களவறியாதவன், பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்' என்பதனால் ஊர்தி கூறினாரா யிற்று. அற்றேல், 'இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி' என்பதனாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/193&oldid=1589425" இலிருந்து மீள்விக்கப்பட்டது