உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

159

சிறப்பாக ஆட்கொண்டருளிய பேரருட்டிறத்தை விதந்தெடுத்து உரைப்பாராயினார். இங்ஙனம் உரைக்கின்றுழித் 'திருத்த சாங்கம்' எனும் பத்து உறுப்புக்களாகிய சிறப்புக்களுடன் ஐயன் எழுந்தருளிய அருள் விழுப்பத்தினை வகுத்தருளிச் செய்தா ராகலின், அப்பத்துறுப்புக்களையும் ஈண்டு எடுத்துக் காட்டுவாம்.

தசாங்கம் இன்ன வென்பது “ஆறு மலையும் யானையுங் குதிரையும், நாடு மூருங் கொடியும் முரசும், தாருந் தேருந் தசாங்க மெனப்படும்” என்னுந் திவாகர சூத்திரத்தான் உணரப்படும். சூடாமணி நிகண்டுடையார் திவாகரத்துட் கூறிய இப் பத்திற் காணப்படாத ‘படை' என்பதனைச் சேர்த்து அவற்றும் காணப் பட்ட ‘தேர்’ என்பதனை விடுவர். இனி, இவ்விரண்டு நிகண்டு நூலார் கூறிய பத்துறுப்புக்களுக்கும், அடிகள் கொண்டருளிய பத்துறுப்புக்களுக்கும் சில வேறுபாடுகள் உள. திருத்தசாங்கம் என்னும் திருப்பதிகத்தில் அடிகள் எடுத்துரைத்த பத்துறுப்புக் கள் : பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்பனவாம்; இவற்றும் 'பேர்’ ‘படை’ என்பன திவாகரத்துட் காணப்படா; 'பேர்' என்பது ஒன்றுமே சூடாமணி நிகண்டிற் காணப்படாது; திவாகரத்திலுள்ள 'யானை’ “தேர்’ என்பன அடிகள் திருப்பதிகத்திற் காணப்படா; சூடாமணி நிகண்டிலுள்ள ‘யானை’ என்பதொன்றுமே அடிகள் அருளிய பத்திற் காணப்படுவதில்லை. இவ் வேறுபாடுகள் உணரற்பாலன. இப் பத்துறுப்புக்களையும் பிற்காலத்தார் சின்னப்பூ வென்று கூறுவர் என நச்சினார்க்கினியர் “வழக்கொடு சிவணிய வகைமையான” என்னுஞ் சூத்திர வுரையிற் கூறுவர்.* (தொல் காப்பியம் புறத்துணையியல் 31)

இனி, அடிகள் தாம் அருளிச்செய்த பத்துறுப்புக்களும் ஈண்டு வருமாறு ‘ஆற்ற லதுவுடை யழகமர் திருவுரு, நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்' என்பதனாற் கொடி கூறினா ராயிற்று. இறைவன் றிருநுதலினும் பிற விடங்களினும் மூன்று வரிகளாக இடப்பட்ட திருநீற்று வரைகள் கொடிகள் போல் விளங்குவாயின. 'நிமிர்ந்து காட்டியும்' என்னுஞ் சொற்றொ டர்க்கு இடையிட்டுக் காட்டியும் என்று பொருளுரையாமல் உயர்ந்து காட்டியும்' என்று பொருளுரைப்பின் நுதலிற் றீட்டிய திருநீற்றுவரை ஒன்றுமே கொள்ளப்படும். 'கோடி' என்னுஞ் சொல் திருநீற்றுவரையைக் குறிக்குஞ் சொல்லாயினும், அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/192&oldid=1589424" இலிருந்து மீள்விக்கப்பட்டது