உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

  • மறைமலையம்

-

25

றொடக்கத்தில் தானே அவைதமக்கு வகுத்துரைப்பினல்லது, அவை வ தாமாகவே அவ்வியல்பெல்லாம் அஞ்ஞான்று ஒருங்குணர்தல் செல்லாமையால் அவன் அவைதம் உள்ளத்தில் நின்றும் நேர்நின்றும் ஆசிரியன் வடிவிற் போந்தும் அக்கல்வி யறிவினைத் தோற்றுவிப்பான் என்பதும் மீண்டும் அதனை ஒடுக்கியருளுவானென்பதும் அறிவுறுத்துவார் ‘துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்' என்பதனை அதன்பிற் கூறினார்.

இனி, எல்லாவுயிர்க்கும் அவை கேளா திருக்கையிலும் ங்ஙனம் அருள் புரிந்து வரும் முதல்வன் ‘ஒன்றுக்கும் பற்றாத அடியனேன் அறியாமையினையும் நீக்கினான்' எனத் தம்மளவிற் செய்த உதவியையும் உணர்த்துவார் ‘என்னுடையிருளை ஏறத் துரந்தும்' என்றருளி.ச் செய்தார். உலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்க்கும் இறைவன் செய்துவரும் உதவியை ஒருவன் நூல்களின் வாயிலாய்த் தெளிந்தானேனும் அல்லது அதனை நேரே புலப்படக் கண்டானேனும் அவ்வுதவி தன்மாட்டும் நிகழக் கண்டாலன்றி அதன்கண் உறுதிப்பாடும் முதல்வன்பால் நெகிழ்ந்த அன்பும் அவற்குத் தோன்றாவென் றுணர்க.

இனித் தமக்குச் செய்த அருட்பான்மை பற்றி, அடியார் எத்திறத்தாராயினும் அவருள்ளத்தில் ஐயன் மகிழ்ச்சி மீக்கூர நிலைபெற்றிருப்பனென்பது ‘அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக்கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்' என்னும் அடிகளாற் கூறினார்.

இனி, அடியார்க்கு இங்ஙனம் எளியனாயிருந்து அவர்க்கு முதல்வன் ஆற்றும் உதவிகள் பல திறப்படும் என்பதனை ஆண்டாண்டு நிகழ்ந்த வரலாறுகளான் உணர்த்துவான் புகுந்து ‘கல்லாடத்துக் கலந்தினி தருளியும்' என்னும் பதினோராம் அடி துவங்கிச் ‘சுந்தரத் தன்மையொடு துதைந்திருத் தருளியும்' என்னுந் தொண்ணூற் றொன்பதாம் அடிகாறும் அவற்றை எடுத்துக் கூறினார். இறைவன் தம்மையும் ஓர் அடியவனாக ஏற்றுத் தம் பொருட்டுக் காட்டிய தோற்றங்களையும் இவற்றி டையிடையே அடிகள் கூறுதுல் காண்க.

இனி, 'மந்திர மாமலை மகேந்திர வெற்பன்' என்னும் நூறாம் அடி துவங்கி ‘அப் பரிசதனால் ஆண்டுகொண் டருளி' என்னும் நூற்றிருபத்தாறாம் அடிவரையில் இறைவன் தம்மைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/191&oldid=1589423" இலிருந்து மீள்விக்கப்பட்டது