உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

157

இனி, இத்திருவகவலின் பொருள் அடைவு ஒரு சிறிது காட்டுவாம். இத்திருவகவலும், இதன்பின் நிற்கும் ‘திருவண்டப் பகுதி' 'போற்றித் திருவகவல்' என்னும் ஏனை யிரண்ட கவல்களும் அடிகள் தில்லைக்கண் அருளிச் செய்கின்றாராக லானும், தில்லைக்கண் உளதாகிய அம்பலம் இந்நில வுலகத்திற்கு நடுவணதாய் நிற்றலால் அதன்கண் இறைவன் ஓவாது ஆடுத லானும், நேர் உருளின் சுற்றுவட்டத்தின்கட் காணப்படும் இயக்கம் அதன் நடுமையத்தினின்றுந் தோன்றுதல் போல, நிலவுலகத்தின் இயக்கமும் இதன்கண் உள்ள எல்லாப் பொருள்களின் இயக்கமும் இதன் நடுமையத்தாகிய திருவம் பலத்தின்கண் நின்றே தோன்றற்பாலதாகலானும் அவ்வியல்பு புலப்படத் ‘தில்லைமூதூ ராடிய திருவடி' என்னுஞ் சொற் றொடரை முதற்கண் வைத் தருளிச்செய்தார்.

இந்

இனி, அண்டத்தின் நடுவில் ஆடுமாறுபோலவே பிண்டமாகிய ஒவ்வோர் உயிர் உடம்பின் நெஞ்ச வெளியிலும் ஐயன் அருட்கூத்து இயற்றுதல் பற்றிப் 'பல்லுயிரெல்லாம் பயின்றன னாகி' என்பதை அதன்பின் வைத்தார்.

வ்வாறு இறைவன் அண்டபிண்டங்கள் இரண்டினும் ஓவாது இயங்கும் முறைகொண்டே, மக்களறிவி னளவுக்கு ஏனையொருவாற்றானும் அகப்படாத அவன்றன் வியத்தகு தன்மைகள் ஒருவாற்றான் அறியக்கிடத்தலின் ‘எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி' என்பதனை அதன்பின் வைத்தார். ஓவியம் வல்லான் அறிவின்றிறம் அவன் வரையும் ஓவியத்தின் அழகும் நுணுக்கமும் பற்றி அளக்கப்படுமாறு போல இறைவன்றன் விரிந்த அறிவும் வரம்பிலாற்றலும் கரைகடந்த அருளும் அவனாற் படைக்கப்பட்டியங்கும் இவ்வண்ட பிண்டங்களின் அமைப்புகளைக் கொண்டே ஒருவாற்றானா யினும் அளந்தறியப் படுமென்க.

னி, அறியாமை நீக்கத்தின் பொருட்டு உயிர்களை உடம்புகளிற் புகுத்தி உலகங்களில் இயங்கவிட்ட இறைவன், அவற்றிற்கு அவ்வாற்றான் வரும் அறிவு விளக்கம் பின்னும் விரைந்து முறுகுதல் வேண்டிப், பதி பசு பாச இலக்கணங் களையும் கட்டு வீடென்னும் இவற்றின் இயல்புகளையும், கட்டறுத்து வீடுபேற்றின்கண் முயலுமாற்றையும் படைப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/190&oldid=1589422" இலிருந்து மீள்விக்கப்பட்டது