உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

❖ 25❖ மறைமலையம் - 25

காடதுதன்னிற் கரந்தகள்ளமும் ஒருவன் ஆகிய தன்மையும் பாலகன் ஆகிய பரிசும் கோலங் கொண்ட கொள்கையும் நல்கிய நன்மையும் வைத்த அப்பரிசும் பெண்ணோடாயின பரிசும் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் பலபல காட்டிய பரிசும் எனப் பல பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்து, உயர் கிழவோன் என்னும் எழுவாயைக் குறிக்கும் ‘தானேயாகிய தயாபரன் எம்மிறை' என்பது இடம்பெற இருந்தும் எழிலது காட்டியும் சைவன் ஆகியும் அருத்தியோ டிருந்தும் விருப்பன் ஆகியும் காட்சி கொடுத்தும் வழுக்கா திருந்தும் அறம்பல அருளியும் குறியாயிருந்தும் சாத்திரன் ஆகித் துதைந்திருந் தருளியும் என்னும் வினையெச்சங்களுக்கு வினைமுதலாய் நிற்ப, அவ்வெழுவாய்ப் பொருளையே குறிக்கும் 'மாதிற்கூடை மாப்பெருங் கருணையன்' என்பது நிமிர்ந்து காட்டியும் ஆறா அருளியும் என்னும் வினையெச்சங்கட்கு முதலாய் நிற்பப், பின்னர் ‘அழுக்கடையாமல் ஆண்டு கொண்டருள்பவன் என்பது கைக்கொண்டருளியும் என்பதற்கும், ‘சுடர்விடு சோதி’ என்பது அணிந்தும் என்பதற்கும், ‘அளவறியாதவன்' என்பது பயின்றவண்ணமும் என்பதற்கும், ‘அருள் புரிபவன்’ என்பது பதியாகவும் என்பதற்கும், ‘பரம்பரத் துய்ப்பவன்' என்பது ஊராகவும் பெயர் ஆகவும் மலையாகவும் ஆண்டு கொண்டருளி நாயினேனைப் பொதுவினில் வருகென ஒழித்தருளி உடன்கலந் தருளியும் என்பவற்றிற்கும் முதலாய்நிற்ப, எய்த வந்திலாதார் எரியிற் பாயவும், பாதம் எய்தினர் மயக்கம் எய்தியும் அலறியும் மண்டி அரற்றிப் பாதம் எய்தவும் ஏங்கினர் ஏங்கவும் பொது வினில் நடம் நவில் இறைவன் உமையொடு காளிக்கு அருளிய சிறுநகை இறைவன் என்னும் அப்பொருளையே குறித்தபெயர் முடிக்கும் எழுவாயாய்ப் புக்கினி தருளினன் என்னும்

வினைகொண்டு முடிந்தது. ஆகவே, இத்திருவகவலில் இறைவன் கைலை உயர்கிழவோன் என்னும் இரண்டு எழுவாய்களும் ஒரு பொருண் மேலவாகலின் மேற்காட்டிய பெயர்ப் பயனிலை களையும் புக்கினி தருளினன் என்னும் ஒரு வினைமுற்றையுங் கொண்டு முடிந்தன; இடையிடையே இப்பொருண்மேல் வந்த ஏனைப்பெயர்கள் இடையிடையே ஏனைப் பெயர்ப் பயனிலைகட்கும் வினையெச்சங்கட்கும் வினைமுதலாய் நின்றன

வென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/189&oldid=1589421" இலிருந்து மீள்விக்கப்பட்டது