உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

155

இனிக் காளிக்கு அருள்புரிந்தவாறு காட்டுதும் பண்டொரு கால் தாருகன் என்னும் ஓர் அரக்கனைக் கொல்லும் பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட ஒரு காளி அவனொடு பொருது அவனுடலைக் கீண்டவழிக் கீழே சிந்திய குருதியாற் பின்னும் பலர் உண்டாதலைக் கண்டு அவனது செங்குருதியைத் தானே முற்றும் விடாது பருக, அதனால் வெறி பிடித்து உலகத்துள்ள உயிர்களை யெல்லாம் அழிப்பான் புக்கனள். அதுகண்டு எல்லா உயிர்க்குங் தந்ததையாய் விளங்கும் முதல்வன் அவள்முற் றோன்றிக் கொடுங் கூத்தியற்ற, அவள் அக்கூத்தின் கடுமையால் தனது வெறியடங்கி இறைவனருளைப் பெற்று அமைதி பெற்றாளென்பது இது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த

"வென்றிமிகு தாரகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ நின்றுநடம் ஆடியிடநீடுமலர் மேலால்

மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே”

என்னுந் திருப்பாட்டான் அறியப்படும்.

இனி இத்திருவகவல் ‘மாட்டு' என்னும் உறுப்பால் அகன்று பொருள்முடிய நிற்றலின், அதனை அணுகிய நிலையில் வைத்துரைக்கும் வினைமுடிபு காட்டல் வேண்டும்; அது வருமாறு: ஒலிதரு கைலை உயர் கிழவோன் பயின்றனனாகிப் பல்குணம் விளங்கிக் கல்விதோற்றியும் அழித்தும் இருளைத் துரந்தும் அடியார் உள்ளத்துக் குடியாக்கொண்ட கொள்கை யுஞ் சிறப்புமெனப் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது, பின்னும் கைலை உயர்கிழவோன் ஆகமந் தோற்றுவித்தருளியும் கலந்தினி தருளி நயப்புரவெய்தியும் இன்னருள் விளைத்தும் நற்றடம் படிந்தும் ஆகமம் வாங்கியும் பணித்தருளியும் அமர்ந் தருளியும் இயல்பினதாகி உய்ய வந்தருளிச் சாத்தாய்த்தான் எழுந்தருளியும் காட்டிய கொள்கையும் ஈந்த விளைவும் காட்டிய தொன்மையும் ஆக்கிய நன்மையும் தோற்றிய தொன்மையும் காட்டிய இயல்பும் ஆகிய கொள்கையும் அருளிய பரிசும் வேடங் காட்டிய இயல்பும் மேனி காட்டிய தொன்மையும் சிலம்பொலி காட்டிய பண்பும் கரந்தகள்ளமும் ஆக்கிய பரிசும் ஆ கிய நன்மையும் இருந்த கொள்கையும் அருளிய அதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/188&oldid=1589420" இலிருந்து மீள்விக்கப்பட்டது