உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

  • மறைமலையம் - 25

றினையுரைப்ப, அவ்வாரிசேடரும் அவ்வின்பக் கூத்தினைக் காணும் வேட்கை மீதூர்ந்து கண்ணீர் பொழிய, அதுகண்ட திருமால் ‘நீர் இறைவற்கு அன்பராயினமையின் இனி நும்மை அணையாகக் கொள்ளல் எமக்கு ஏதமாம்; ஆதலின் நீர் தவம்முயறலே இசைவாம்' என்று கூறிவிடுப்ப, அவரும் வடகைலை மருங்கு சார்ந்து சிவபிரான் திருக்கூத்துக் காண விழைந்து அருந்தவம் இயற்றினார்.

அதுகண்டு இறைவனும் அவர் முன் றோன்றி அவரன்பினைப் பிறரறிய ஆராய்ந்து புலப்படுத்தி, 'யாம் தேவதாரு வனத்தின்கட் டிருக்கூத்து ஆடிய காலையில் அவ்விடம் இந்நிலத்திற்கு நடுஅன்மையின் அஃது அதனைப் பொறுக்கலாற்றாது அசைந்தது. ஆனதுபற்றி அதனை அங்கியற்றாது விடுத்தேம். இப்போது இங்கு அதனை இயற்று தற்கும் ஈது இடம் அன்று. அதனைப் பொறுத்தற் கிசைந்த தில்லைமன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பக்கூத்து என்றும் நடைபெறா நிற்கும். அஃதேனெனில், உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். இடை பிங்கலை சுழுமுனை உடம்பின் நடுவோடும் அங்ஙனமே, இந்நிலத்திற் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே போம். உடம்பின்கண் அந்நடு நாடியின் நடுவே வயங்கும் நெஞ்சத் தாமரையினுள் அருள் அம்பலத்தின்கண் என்றும் ஓவாது திருக்கூத்து இயற்றுவேம். அதனை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையார் பிறவித் துன்பம் அறப் பெறுவர். ஆதலால், நீ இவ்வுருவை ஒழித்து, அத்திரிமுனிவன் மனைவி தொழுதகையிடத்தே முன்னொரு கால் ஐந்தலைச் சிறு பாம்பாய் நீ வந்தமையின், அவ்விடிவி னையே எடுத்துத் தில்லைக்கட் சென்று சேர்வையேல், அங்கு இங்ஙனமே வேட்கை யுற்று வழிபாடு இயற்றும் புலிக்கான் முனிவனுக்கும் உனக்கும் தைப்பூசத்தன்று எமது இன்பக் கூத்தைக் காட்டியருள்வோம்' என்று உரைத்து மறைந்தருளி னான். பின்னர்ப் பதஞ்சலி முனிவரரும் அங்ஙனமே தில்லைக்கட் போந்து புலிக்கான் முனிவரருடன் அளவளாவி யிருந்து தவமி யற்றி இறைவன் குறித்த அந்நாளில் ஐயனியற்றிய ஐந்தொழில் ன்பக்கூத்தைக் கண்டுகளித்தனர் என இவ்வரலாறுகளை உமாபதிசிவனார் செந்தமிழ் நந்தா இலக்கியமாய்ச் செய்தருளிய கோயிற்புராணம் விரித்துக் கூறும்.

நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/187&oldid=1589419" இலிருந்து மீள்விக்கப்பட்டது