உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

153

இருவினைகளுட்பட்டுப் பிறந்திருந்து வருமெனவுங் கொண்ட கொள்கையினராய், இவற்றைத் தம் மனைவிமார்க்கும் அறிவுறுத்தி அவரைத் தஞ்சொல்வழியின் நிறுத்தி ஒழுகி வருவாராயினர். இவர்கள் கொண்ட பிழைபாட் முணர்ச்சி ஸயனையுஞ் செருக்கினையும் அகற்றி இவரை ஆட்கொள்ளத் திருவுளம்பற்றின முதல்வன் திருமாலை அழகிய பெண்வடிவில் வரக்கற்பித்துத் தானும் அவ்வணங்குமாய் அத் தேவதாரு வனத்தின்கட்செல்ல, இறைவன்றன் அளவுக் கடங்கா எழிலுரு வினைக் கண்டு காமுற்று அவ்விருடிகளின் மனைவிமார் நிறை யழிந்தனர்; திருமால் கொண்ட அழகிய அணங்கின் வடிவைக் கண்டு அவ்விருடியர் காமுற்றுத் தம் உரனுஞ் செருக்கும் அழிந்தனர்.

பின்னர் அவர் ஒருவாறு அறிவு தெளிந்து தமது நிலை சிதைத்தவர் சிவபிரானே என உணர்ந்து அவர்க்குப் பல சாபங்களைத் தல அவை இறைவனைப் பற்றாதொழிய, அவர் கேள்விக்கண்ணே நின்றும் ஒரு கொடும்புலியைப் பிறப்பித்து ஏவ, முதல்வன் அதன் றோலை யுரித்து உடுத்தனன்; பின்னர் ஒரு கொடும்பாம்பை அவர் ஏவ, ஐயன் அதனைக் கைக்காப்பாக அணிந்துகொண்டனன்; அதன்பின்னர்க் குறள்வடிவினதாகிய முயலகனை அவர் ஏவ, ஆண்டவன் அதன்மேற் பாய்ந்து அதன் முதுகு நெரியும்படி மிதித்தருளினன்: அதன்பிறகு பல மந்திரங் களை ஏவ, அவற்றைத் தனது திருவடியிலே சிலம்புகளாக அணிந்து எல்லாம் வல்ல பெருமான் மிகக்கொடிய திருக்கூத்து இயற்றுவானாயினன். அத்திருக்கூத்தின் கடுமை பொறுக்கலாற் றாது அம்முனிவரர் ஒருங்கே அயர்ந்துவிழ, அருகுநின்ற திருமாலும் நடுங்கினர், அதுகண்ட இறைவன் இரக்கம் உடை யோனாய் அக் கடுங்கூத்தை மாற்றி இன்பக் கூத்தினை இன்பப் பெருக்கிலாழ்ந்து மகிழ்ந்தனர்; தேவதாரு வனத்து இருடிகளும் தம் அயர்வு நீங்கித் தம் பிழைபொறுத்தருளும்படி வேண்டினர். இறைவன் அவர் இதற்கு முற்கொண்ட ஆணவ வலிகளெல்லாம் தன் திருவடிக் கீழ்கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள்செய்து மறைந்தருளினன்.

பின்னர்த் திருமால் தம் இருக்கைசேர்ந்து இறைவன் செய்தருளிய இன்பக்கூத்தினை நினைந்த பெருங்களிப்பால் துயிலாதிருந்து தமக்கு அணையான ஆதிசேடற்கு அப்பேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/186&oldid=1589417" இலிருந்து மீள்விக்கப்பட்டது