உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 25

-

இலைக்குடிலுக்குக் கொணர்வித்து இனிய திண்பண்டங்களுந் தீம்பாலும் ஊட்ட அம்மகவு அவற்றை உண்ணாது உமிழ்ந்து பசிபொறாது அழப், பெற்றார் இருவரும் மனம் நைந்து சிவலிங்கப்பெருமான் திருமுன்பு அதனைக் கொண்டு சென்று கிடத்தினார்.

இறைவன் அருள்சுரந்து அம் மகவுக்குத் தீவிய தெய்வப் பாற்கடலையே உணவாக ஊட்ட அம்மகவு அதனை இனிதுபருகிக் களித்திருக்கப், புலிக்கான் முனிவருங் கவலை தீர்ந்து இறைவனது அருட்குறியினெதிரே சிவயோகத்தில் அமர்ந்து இறைவன் றிருவடியிற் கருத்து ஒன்றுபட்டிருக்க, அப்போது அவரகத்தே இறைவன் தேவதாருவனத்து இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழிலின்பக் கூத்தின் வரலாறு வந்து தோன்றிற்று. அதனைத் தெரிந்த அளவானே ‘இறைவன் றனது திருவடியால் திருக்கூத்தியற்றிய தேவதாரு வனத்தில் அேையன் இருக்கப்பெறாமல் இந்த இடத்தில் இருக்கப் பெற்றனனே! ஐய னருட்கூத்தை யான் காணுமாறு யாங்ஙனம்!' என்று பெரிதும் உள்ளம் உருகி வருந்தாநிற்ப, இத்தில்லையே இந்நில வுலகத் திற்கு நடநாடியாயிருத்தலால், இதன்கண்ணேதான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற்கூத்து நிகழ்த்துவன்; ஆதலால், இத்தில்லை யம்பலத்தின்கட் புறத்தேயும் யான் அத் திருக்கூத்தினைக் காணப்பெறுவேன் என்று தவக்காட்சியால் உணர்ந்தவராய்ப் புலிக்கான் முனிவர் அங்கே வழிபாடு ஆற்றிக் கொண்டு இரா நின்றார். இவர் இவ்வாறிருப்பப் பதஞ்சலி முனிவர் இவர்பாற் போந்தமையும், இவ்விருவர்க்கும் இறைவன் தனது திருக் கூத்தினைக் காட்டியருளினமையும் சிறிது கூறுவாம்.

தேவதாரு வனத்தின்கண் இருந்த நாற்பத்தொணணாயிரம் முனிவரரும் மீமாஞ்சைநூற் கோட்பாட்டினைப் பின்பற்றினவர். மறைநூல் ஒருவராற் செய்யப்படாமல் என்றும் உள்ளதெனவும், மறைநூல் கூறிய வேள்விகளை வேட்டல் ஒன்றுமே இம்மை மறுமை யின்பங்களை யளிப்பதெனவும், உயிர்களின் வேறாக முதல்வன் ஒருவன் இல்லையெனவும், மறைநூலிற் சொல்லப் பட்ட சிவம் முதலான ஒலிகளே பிரமமாவதன்றி இவற்றான் அறிவிக்கப்பட்டு இவற்றின் வேறாய் உள்ள கடவுளர் பிறரில்லையெனவும், உலகம் என்றும் அழியாதுநிற்ப தெனவும், உயிர்கள் பலவாய் என்று முள்ளனவாய் எங்கு நிறைந்தனவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/185&oldid=1589416" இலிருந்து மீள்விக்கப்பட்டது