உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 25

காரணப் பொருளாய மாயையுட் கலந்துநிற்கு மெனக் கூறுதல் பண்டைநூற்கருத்துக்கும் ஆராய்ச்சியுணர்வுக்கும் இசைந்த

தேயாமென்று தெளிந்துகொள்க.

இனிக் ‘கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்' என்றது. உடம்புகளை எடுத்து இருவினைகளுட் கிடந்து உழன்று அயர்வுற்ற உயிர்கட்கு அவ்வுயர்வு தீர்த்து அவற்றின் வினைகளை முதிர்வித்தற்பொருட்டு அழித்தற் றொழிலைச் செய்த முதல்வள், அவை அவ்விளைப்புத் தீருங்காறும் வாளா இருந்து பின்னர் அவற்றைத் தொழிற்படுத்துவா னென்பதை உணர்த்து கின்றது.

இனி

அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் டுபேறாய் நின்ற விண்ணோர்பகுதி' என்பதில் அறுவகைச் சமயங்கள் என்பன அடிகள் காலத்தும் அடிகட்கு முற்பட்ட காலத்தும் எவை என்று ஒருசிறிது ஆராயற்பாற்று அடிகட்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டெழுந்த நூல்களுள் வகுத்துரைக்கப் பட்ட சமயப் பகுப்பு ஈண்டு கொள்ளற்பாற்றன்று. அடிகள் காலத்திற்கு முற்பட்டதான மணிமேகலைச் செந்தமிழ்க் காப்பியத்துச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையில் எடுத்துக் கூறப்பட்ட சமயங்கள் வருமாறு : பிருகற்பதி செய்த ரோகாயதம், புத்தன் வகுத்த பௌத்தம், கபிலன் இயற்றிய சாங்கியம், அக்கபாதன் ஆக்கிய நையாயிகம், கணாதன் கண்டவைசடிகம், சைமினி தந்த மீமாஞ்சகம் என்னும் ஆறும்; சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழுமாம்; இவற்றுட் பூதவாதி சொல்வன உலோகாயத்துள் அடங்குதலிற் பிற்கூறிய மதங் களும் ஆறெனவே படும்.

இனித் திவாகரத்துட் கூறப்பட்டன: வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், உலோகாயதம் என்பனவாம். சமயம் ஆறென்னும் பகுப்பின்றி, அகச்சமயம் புறச்சமயம் என்னும் பாகுபாடு திவாகரத்துட் திவாகரத்துட் காணப் படுவதில்லை. இனித் திவாகரத்திற்குப் பிற்பட்டதாகிய பிங்கலந்தையுள் உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம்,பட்டாசாரியம் என்னும் ஆறும் புறச்சமயமாம் எனவும்; வைரவம் வாமம் காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும் ஆறும் உட்சமயமாம் எனவும் கூறப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/219&oldid=1589451" இலிருந்து மீள்விக்கப்பட்டது