உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

187

இனிச், சூடாமணி நிகண்டுடையார் அகச்சமயம் ஆறும் பிங்கலந்தையுட் கூறியவாறே கூறிப், புறச்சமயம் கூறுகின்றுழிப் பிங்கலர் கூறிய பாட்டாசாரியத்தை விடுத்து அதனின் வேறாக மாயாவாதம் என்பதொன்று சேர்த்து மற்றையவெல்லாம் பிங்கலர் மொழிந்தவாறே எடுத்துரைப்பர். இங்ஙனமல்லாமற் பின்றைக்கால நூல்களில் வகுத்துரைக்கப்படும் அகச்சமயம் அகப்புறச்சமயம் புறச்சமயம் புறப்புறச்சமயம் என்னும் நால்வகைப் பகுப்பும் அப்பகுப்பிற்பட்ட எல்லாச் சமயப் பெயர்களும் சூடாமணி நிகண்டினும் அதற்கு முற்பட்ட பண்டை நூல்களினுங் காணாமையின் அடிகள் ஈண்டுக் குறிப்பிட்ட அறுவகைச் சமயங்களும் பிற்றை ஞான்றை ஆசிரியர் கூறும் நாற்கூற்றிற்பட்ட அறுவகைச் சமயங்கள் ஆகா. ஆசிரியர் திருமூலநாயனாரும் புறச்சமயம் எனவும் ஆறுசமயம் எனவுங் குறித்ததன்றி அவற்றின் பெயரும் வகையும் எடுத்தோ திற்றிலர். ஆகலான், அடிகளுக்கு முற்பட்ட முற்பட்ட காலத்தில் எழுந்த மணிமேகலைச் செந்தமிழ்ப் பொருட்டொடர் நிலைச் செய்யுளில் எடுத்தோதப்பட்ட சமயங்களே ஈண்டு அடிகளாற் சுட்டப்பட்டனவாமென்பது தெற்றெனப் பெறப்படும். இனி, மணிமேகலையிற் கூறிய அடைவே அச்சமயக் கோட்பாடுகளை ஒருசிறிது விளக்கிக் காட்டுதும்.

என்பது

கட்புலனாற்

அவற்றுள், உலோகாயதம் காணப்படுவனவே உண்மையாமன்றி ஏனையவெல்லாம் பொய்யாமெனவும், நிலம் நீர் தீ வளி என முதற்பொருள்கள் நான்கேயாமெனவும், இந்நான்கின் கலப்பால் உடம்பும் அவ்வுடம்பினிட்த்தே கள்ளின்கட் களிப்புப்போல் ஓர் அறிவும் உண்டாமெனவும், அந்நூற்பொருட் பிரிவில் உடம்பழிய அவ்வுடம்பின் கட்பிறந்த அறிவும் உடன்அழியு மெனவும், இவ்வாறன்றி உடம்பின் வேறாய் ஓர் உயிரும் அது துய்க்கும் இருவினைகளும் அவற்றின் பயனாமெனுற் துறக்க நிரயங்களும் உளவாமென்றல் வெறும் பொய்யேயா மெனவும், வேள்வி யாற்றுதலும் மறைகள் ஓதுதலும் முக்கோல் தாங்குதலும் உடம்பெங்கும் வெண்ணீறணிதலும் எல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதார் தம் பிழைப்பின் பொருட்டுச் செய்து கொண்டனவேயா மல்லாமற் பிறிதல்லவெனவும், வேள்விக்கட் கொன்ற உயிர் துறக்கம் புகுவது உண்மையாயின் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/220&oldid=1589452" இலிருந்து மீள்விக்கப்பட்டது