உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் - 25

வேட்பவனே அதன்கண் விழுந்து உயிர் விடாமை என்னை? என்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையின் அது பொய்யே யாமெனவும், ஆகலான் இம்மைக்கண் உயிர் உள்ள போதே கடன் புகுந்தாயினும் உண்டுடுத்து இன்புற்று வாழ்வதே மெய்யாமெனவும், ஏனெனில் ஒருமுறை உடம்பு சாம்பராய் வெந்தழிந்தாற் பின்னர் உயிர் அதன்கண் மீண்டு புகுது மாறில்லை யெனவும் கூறாநிற்கும்.

இனிப் பூதவாதமாவது நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பொருள்களோடு அவற்றின் வேறாகிய விசும்பு என்பதும் ஒன்று உண்டெனக் கொண்டு, ஏனைக்கொள்கைகளெல்லாம் உலோகாயதத்தோடு ஒத்து நிற்பது.

இனிப் பௌத்தம் என்பது சௌத்திராந்திகமும் யோகா சாரமும் மாத்தியமிகமும் வைபாடிகமும் என நான்காம்.

6

அவருட் சௌத்திராந்திகர் மதம் வருமாறு. கொலை முதலாகிய ஐவகைக் குற்றமுங் கடிந்து, பழுதற்ற அருளாற் பிற உயிரின் துன்பங்களைத் தானே ஏன்று கொள்வானாய்ப் பிடகநூல் சொன்ன புத்தமுனிவனே தமக்குத் தெய்வமாவன் என இவர் கூறுப. இவர் கைக்கொள்ளும் அளவைகளாவன காண்டலுங் கருதலும் என இரண்டாம் இவை இரண்டாலும் அறியப்படுவன ஞானமும் ஞேயமும் என இரு பகுப்பினவாம். இவற்றுள் ஞானமென்பது அறிவதூஉம், ஞேயமென்பது அறியப்படுவதூஉமாகும். இஞ்ஞானஞேயங்கள் உருவும் அருவும் வீடும் வழக்குமென நான்காகி இந்நான்கும் பெயர்த்தும் அவ்விரலண்டாகி எட்டாய் விரியும். இனி இவையெல்லாங் கணங்கடோறும் மாய்ந்து மாய்ந்து வருமெனக் கூறுபவாகலின் இவர் கணபங்கவாதிகள் எனவும் பெயர் பெறுவர். இனி, மேற்சொன்ன உருவுதான் நிலம் நுர் தீ வளி என்னும் நாற் பொருள்களைப் பற்றிய பூத உருவும், அந்நாற்பொருட் பண்பு களான வன்மை நாற்றம் சுவை நிறம் என்பவற்றைப் பற்றிய உபாதான உருவுமென இரு உபாதான வுருவாவதும் பண்பினுரு வென்றும் உணரற்பாற்று. சித்த அருவும், அங்ஙனம் அறிந்த வற்றை நல்லது தீயது எனப் பகுத்துக் காணபதாகிய கன்ம அருவு மென இருமன்மைத்தாம்.சித்த அருவை மன அரு எனவும், கன்ம அருவைத் தொழில் அருவெனவும் தமிழில் மொழிபெயர்த் துணர்ந்துகொள்க. இனி வீடு என்பதுதான் இணைவிழைச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/221&oldid=1589453" இலிருந்து மீள்விக்கப்பட்டது